இது உங்கள் இடம்: இளைஞர்களுக்கு செய்யும் அநியாயம்!

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கோ.மங்கையர்க்கரசி, விருத்தாசலம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:தமிழகத்தில் படித்து பட்டம் பெற்று, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:

கோ.மங்கையர்க்கரசி, விருத்தாசலம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

தமிழகத்தில் படித்து பட்டம் பெற்று, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை, முந்தைய அரசு 58லிருந்து 59 ஆக உயர்த்தி, பின் 60 ஆக உயர்த்தியது.



latest tamil news


இது, படித்த இளைஞர்களின் நெஞ்சில் வேதனையையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 அல்லது அரசு ஊழியர்களின் பணிக்காலம் 31 ஆண்டுகள் என நிர்ணயிக்க வேண்டும். இதனால் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, ஓரளவு அரசு பணிக்கான வாய்ப்பு கிடைக்கும்.


latest tamil news


தற்போது சில அரசு ஊழியர்கள், 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பணியில் உள்ளனர். அவர்கள் போதிய அளவு வருவாய் ஈட்டி, வாழ்க்கையை சிறப்பாக அமைத்திருப்பர். அவர்களுக்கு ஓய்வு அளித்து, அந்த வேலையை இளைஞர்களிடம் ஒப்படைக்கலாம்.கஜானாவில் பணம் இல்லை என்ற காரணத்தால், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு செய்யும் மாபெரும் அநியாயம்.எனவே முதல்வர் ஸ்டாலின், வேலைஇல்லா இளைஞர்களின் எதிர்காலம் கருதி, அரசு ஊழியர் ஓய்வு பெரும் வயதை குறைக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
24-ஆக-202117:18:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN செய்தி தமிழக அரசின் பணிநியமன முடிவைப்பற்றி ஆனால் டீம்கா கொத்தடிமைஸ் எழுதுவது மத்திய அரசின் டிஸ்வெஸ்ட்மென்ட் பற்றி அதில் ஒருத்தனுக்கு ஏபிசிடி எழுத்துக்கள் எத்தனை என்பதில் சந்தேகம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-ஆக-202112:43:49 IST Report Abuse
sankaseshan பட்ஜெட்டின் 80 % அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு ம் பென்ஷன் க்கும் போகிறது
Rate this:
Cancel
Thiru - Chennai,இந்தியா
24-ஆக-202112:27:58 IST Report Abuse
Thiru அரசு ஊழியர்கள் 95% DMK வாக்காளர்கள், அரசு ஆசிரியர்கள் 125% DMK. நீங்கள் கேட்பது நடக்கலாம் ஏன்னா வாக்கு வாங்கி அதிகரிக்க வாய்ப்பு அதிகம் மேலும் லஞ்ச பணத்துல நிறைய குடும்பம் படு ஜோரா வாழ வாய்ப்பு. 50வயசு நல்லாயிருக்குமோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X