சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான சிறுவன் சில மணி நேரத்தில் மீட்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
பம்மல் : பம்மலில், மாயமான நான்கு வயது சிறுவன், சில மணி நேரத்தில் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜூ குமார் ராம். இவர், குடும்பத்தினருடன், பம்மல், மூங்கில் ஏரியில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவரது மகன், அங்குஷ்குமார், 4.நேற்று முன்தினம், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அங்குஷ்குமார், திடீரென

பம்மல் : பம்மலில், மாயமான நான்கு வயது சிறுவன், சில மணி நேரத்தில் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜூ குமார் ராம். இவர், குடும்பத்தினருடன், பம்மல், மூங்கில் ஏரியில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவரது மகன், அங்குஷ்குமார், 4.நேற்று முன்தினம், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அங்குஷ்குமார், திடீரென மாயமானான். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததை அடுத்து, அவரது பெற்றோர், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார், வழக்கு பதிந்து, மாயமான சிறுவனை தேடினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மாயமான சிறுவனின் புகைப்படத்தை, வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டு, தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.இதற்கிடையில், சில மணி நேரம் கழித்து, பல்லாவரம், பாத்திமா மஞ்சில் தெருவில் நின்றிருந்த சிறுவன் அங்குஷ்குமாரை, அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வரும், வெங்கடேசன், 38, என்பவர் பார்த்து, அழைத்து விசாரித்தார்.போதிய விபரங்களை சிறுவன் தெரிவிக்காததால், சிறுவனை, பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின், விசாரணை நடத்தி, சங்கர் நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சங்கர் நகர் போலீசார், சிறுவன் அங்குஷ்குமாரை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X