கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் புறம்போக்கு நிலம்: வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ மாற்றவோ கூடாது

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை,--'கோவில் நலன்களுக்கு அல்லாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தை, வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆட்சேபனைநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வைப்பாமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலரான நந்தகுமார் தாக்கல் செய்த மனு:கோவில் நிர்வாகம் மற்றும்

சென்னை,--'கோவில் நலன்களுக்கு அல்லாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தை, வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil news
ஆட்சேபனை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வைப்பாமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலரான நந்தகுமார் தாக்கல் செய்த மனு:கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை கமிஷனரிடம் இருந்து, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெறாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களை வகைப்படுத்தவோ, மற்றவர்களுக்கு பட்டா வழங்கவோ முடியாது.

இத்தகைய புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால், வருவாய் துறையின் ஒத்துழைப்பின்றி நேரடியாகவே அகற்ற முடியும்.இந்நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை கமிஷனரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லாமல், அது போன்ற புறம்போக்கு நிலத்தில், 81 பேருக்கு, 2012 நவம்பரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அதை புறக்கணித்து விட்டு பட்டா வழங்கி உள்ளனர்.எனவே, எதிர்காலத்தில் எங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


கோரிக்கை

மனுவை விசாரித்த, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:'அரசு நிலத்தில் தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது; பங்குனி உத்திரம் மற்றும் தேர் திருவிழா நடத்த, அங்கு நிலம் இருக்கிறது' என, திருச்செங்கோடு தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.குறிப்பிட்ட 'சர்வே' எண்ணில் உள்ள நிலம், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்டிருப்பது, பதிவேட்டில் தெளிவாகிறது. அதனால், கோவில் வசம் உள்ள இந்த நிலத்துக்கான அனைத்து உரிமைகளும் அறநிலையத் துறைக்கு உள்ளது.


latest tamil news


எனவே, கோவில் நலன் தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும், இந்த நிலத்தை அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ, கட்டுமானங்கள் மேற்கொள்ளவோ கூடாது.அறநிலையத்துறை சட்டம் மற்றும் வருவாய் நிலை விதியின்படி, கோவில் புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தியதை பயன்படுத்த, அறநிலையத்துறை கமிஷனரின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும் என, மனுதாரரின் வழக்கறிஞர் சரியாக சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
24-ஆக-202110:06:51 IST Report Abuse
Darmavan அரசு கட்டுப்பாட்டிலிருந்து கோயில்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
24-ஆக-202111:40:15 IST Report Abuse
தமிழன்எதுக்கு சார் . நீங்க ஆட்டையே போடவா ? இப்போ நல்லாதானே போகுது.....
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-ஆக-202111:49:33 IST Report Abuse
Dhurveshஅரசு கோயில் களுக்கு தானம் கொடுத்த வீட்டில் ஏன் ஐயர்கள் சொற்ப வாடகையில் இருக்கிறார்கள் இதை முதலில் சரி செயுங்கள்...
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
24-ஆக-202109:53:30 IST Report Abuse
Vivekanandan Mahalingam மிக விரைவில் அறநிலையத்துறை தவறுகளை அரசு திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
24-ஆக-202108:54:28 IST Report Abuse
venkatan அறங்காவலர்களும் கரை வேட்டி.. அறநிலையத் துறையும் ஆமாஞ்சாமி..ஆட்டயபோட NOC இனி ஈஸி..எல்லாமே எங்க கோட்டைக்குள்ள..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X