சம்பவம் செய்தி

தமிழ்நாடு

படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் பலி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
எண்ணுார் : ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர், படகில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.சென்னை, எண்ணுார், பெரிய காசிகோவில் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 56; மீனவர். இவர் நேற்று அதிகாலை, தன் உறவினரான ராஜேந்திரன், 60, மற்றும் ஆறுமுகம், 41, ஆகியோருடன், பாரதியார் நகர் கடற்கரையில் இருந்து, பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.மீன் பிடித்து விட்டு, 8:30 மணிக்கு கரை

எண்ணுார் : ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர், படகில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

சென்னை, எண்ணுார், பெரிய காசிகோவில் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 56; மீனவர். இவர் நேற்று அதிகாலை, தன் உறவினரான ராஜேந்திரன், 60, மற்றும் ஆறுமுகம், 41, ஆகியோருடன், பாரதியார் நகர் கடற்கரையில் இருந்து, பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.மீன் பிடித்து விட்டு, 8:30 மணிக்கு கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆறுமுகம், 56, படகில் இருந்து திடீரென தவறி விழுந்தார்.

உடனிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். இருப்பினும், அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த எண்ணுார் போலீசார், ஆறுமுகத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பு ஏற்பட்டு கடலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X