சேதமான மின் கம்பம் வாகன ஓட்டிகள் பீதி| Dinamalar

சேதமான மின் கம்பம் வாகன ஓட்டிகள் பீதி

Added : ஆக 24, 2021
Share
எண்ணுார் : வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், பலவீனமாக உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை, எர்ணாவூர், முல்லை நகர் சந்திப்பில், மின் கம்பிகளை இணைக்கும் வகையில் சாலையோரம் மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் இரு மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் தெரியும் அளவிற்கு படுமோசமாக உள்ளன.இந்த சந்திப்பில் இருந்து எர்ணாவூர், எண்ணுார்

எண்ணுார் : வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், பலவீனமாக உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை, எர்ணாவூர், முல்லை நகர் சந்திப்பில், மின் கம்பிகளை இணைக்கும் வகையில் சாலையோரம் மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் இரு மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் தெரியும் அளவிற்கு படுமோசமாக உள்ளன.இந்த சந்திப்பில் இருந்து எர்ணாவூர், எண்ணுார் போன்ற பகுதிகளுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கவலைக்கிடமாக உள்ள இந்த மின் கம்பம் எப்போது சாயுமோ என, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பலவீனமான மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X