போதிய போலீசார், தனி வாகனம் இல்லாமல் திணறுது குற்றப்பிரிவு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மாதவரம் : புறநகர் காவல் நிலையங்களில் குற்றப் பிரிவுக்கு கூடுதல் போலீசார், தனி வாகனம் இல்லாததால், குற்றவாளிகளை உடனே பிடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை, மாதவரம் காவல் மாவட்ட எல்லையில் செங்குன்றம், புழல், மாதவரம், பால்பண்ணை, மணலி உள்ளிட்ட, 10 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அவற்றில் குற்றப் பிரிவுக்கென தனி இன்ஸ்பெக்டர் போலீசார் உள்ளனர்.வழிப்பறி, கொள்ளை, கொலை என

மாதவரம் : புறநகர் காவல் நிலையங்களில் குற்றப் பிரிவுக்கு கூடுதல் போலீசார், தனி வாகனம் இல்லாததால், குற்றவாளிகளை உடனே பிடிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை, மாதவரம் காவல் மாவட்ட எல்லையில் செங்குன்றம், புழல், மாதவரம், பால்பண்ணை, மணலி உள்ளிட்ட, 10 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அவற்றில் குற்றப் பிரிவுக்கென தனி இன்ஸ்பெக்டர் போலீசார் உள்ளனர்.வழிப்பறி, கொள்ளை, கொலை என குற்ற சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சட்டம் -ஒழுங்கு போலீசார் அந்த இடத்திற்குச் சென்றாலும், அதற்கான முழு விசாரணையை, குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு இருப்பது போல், குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர்களுக்கு தனி வாகனம் இல்லை. இதனால், குற்றம் நடந்த இடத்திற்குச் செல்லவும், குற்றவாளிகளைப் பிடித்து வரவும், அவர்கள் போராட வேண்டி இருக்கிறது.நகை பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் தங்களிடம் உள்ள வாகனங்கள் மூலம், எளிதில் தப்பி விடுகின்றனர். அதன் பின், அவர்களை தேடவும், விசாரிக்கவும் ஓரிரு நாள் காலதாமதமாகி விடுகிறது.

மேலும், குற்றப் பிரிவில் உள்ள போலீசார் தனிப்படை, கோர்ட் உள்ளிட்ட பணிகளுக்குச் சென்று விடுவதால், மிகக் குறைந்த எண்ணிக்கை போலீசார் மட்டுமே காவல் நிலையத்தில் இருப்பர். கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் குறைந்திருந்தாலும், வழிப்பறி சம்பவங்கள் அவ்வப்போது தொடர்கின்றன.எனவே, குற்றப் பிரிவுக்கான தனி வாகன வசதி மற்றும் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்தினால், குற்றங்கள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X