பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேர தடுப்பூசி மையம் துவக்கம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர், உடனடியாக தடுப்பூசி, செலுத்திக்கொள்ள வசதியாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், 24 மணி நேர தடுப்பூசி மையம் நேற்று துவங்கப்பட்டுள்ளது.மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன், தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். டாக்டர் செந்தில்குமார் தலைமையில், செவிலியர், உதவியாளர் அடங்கிய, பத்து பேர்
 24 மணி நேர தடுப்பூசி மையம் துவக்கம்

இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர், உடனடியாக தடுப்பூசி, செலுத்திக்கொள்ள வசதியாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், 24 மணி நேர தடுப்பூசி மையம் நேற்று துவங்கப்பட்டுள்ளது.மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன், தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். டாக்டர் செந்தில்குமார் தலைமையில், செவிலியர், உதவியாளர் அடங்கிய, பத்து பேர் கொண்ட குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மூன்று 'ஷிப்ட்'டுக்கு தனித்தனி டாக்டர் குழுவினர் வருவர். 24 மணி நேரமும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவர்.''தடுப்பூசி செலுத்த வருவோர், ஆதார் கார்டு, தெளிவான முகவரி உட்பட விவரங்களை தெரிவித்து, 18 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 65 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் வரிசையில் காத்திருக்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படும்'' என்று மருத்துவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X