வருவாய் ஆய்வாளர் ஆபீஸ் கட்டடம் சீரழிந்து அபாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய் ஆய்வாளர் ஆபீஸ் கட்டடம் சீரழிந்து அபாயம்

Added : ஆக 24, 2021
Share
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சீரழிந்து, இடியும் அபாயத்தில் உள்ளது.திருக்கழுக்குன்றம் தாலுகாவில், மாமல்லபுரம் குறுவட்டம் அமைந்து, மாமல்லபுரத்தில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்குகிறது. இதன் அலுவலக கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கட்டடம் பலவீனமடைந்து, சுவர் விரிசலடைந்து, மேற்கூரை பெயர்ந்து சீரழிந்துள்ளது.அலுவலர்
 வருவாய் ஆய்வாளர் ஆபீஸ் கட்டடம் சீரழிந்து அபாயம்

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சீரழிந்து, இடியும் அபாயத்தில் உள்ளது.திருக்கழுக்குன்றம் தாலுகாவில், மாமல்லபுரம் குறுவட்டம் அமைந்து, மாமல்லபுரத்தில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்குகிறது.

இதன் அலுவலக கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது கட்டடம் பலவீனமடைந்து, சுவர் விரிசலடைந்து, மேற்கூரை பெயர்ந்து சீரழிந்துள்ளது.அலுவலர் உள்ளிட்டோர் இடியும் அபாய கட்டட அபாயத்தால் அச்சத்துடன் பணிபுரிகின்றனர். மழையின்போது பதிவேடுகள், அலுவலக கணினி உள்ளிட்டவற்றை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. துறை சேவைகளுக்காக வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இக்கட்டடத்தை இடித்து புதிதாக கட்ட, பொதுமக்கள், ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.வருவாய் துறை அலுவலர்கள் ஒருவர் கூறுகையில், 'இதே இடத்தில் புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்ட, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் கட்டுமான பணி துவங்க உள்ளது' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X