பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.ஏ.ஒய்., ரேஷன் கார்டு கோரி 133 மாற்றுத்திறனாளிகள் மனு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருப்போரூர் : தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ், முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் - பி.எச்.எச்.;அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுதாரர்கள் ஏ.ஏ.ஒய்.; முன்னுரிமை இல்லாத கார்டுதாரர்கள் என்.பி.எச்.எச்., - என்.பி.எச்.எச்.-எஸ்.;எந்த பொருளும் வேண்டாதோர் - என்.பி.எச்.எச்.-என்.சி., என ஐந்து விதமான குறியீடுகள் உடைய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.இதில், வறுமை கோட்டுக்கு

திருப்போரூர் : தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ், முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் - பி.எச்.எச்.;அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுதாரர்கள் ஏ.ஏ.ஒய்.; முன்னுரிமை இல்லாத கார்டுதாரர்கள் என்.பி.எச்.எச்., - என்.பி.எச்.எச்.-எஸ்.;எந்த பொருளும் வேண்டாதோர் - என்.பி.எச்.எச்.-என்.சி., என ஐந்து விதமான குறியீடுகள் உடைய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இதில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை மக்களுக்காக, ஏ.ஏ.ஒய்., என்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாதம், 35 கிலோ அரிசி உட்பட அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏ.ஏ.ஒய்., என்ற கார்டு வழங்க கோரி, திருப்போரூர் தாசில்தாரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அச்சங்கத்தினர், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கொட்டமேடு, பெருந்தண்டலம், மடையத்துார் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் கார்டை, ஏ.ஏ.ஒய்., கார்டாக மாற்றி தரக்கோரி, தாசில்தார் ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சுகுமாரிடம், 133 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து ஏ.ஏ.ஒய்., கார்டு வழங்கப்படும் என கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X