கவனத்தை சிதறடிக்கும் வகையில் இ.சி.ஆரில் விளம்பர பலகைகள்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதி களில், வாகன ஓட்டுனர்கள் கவனம் சிதறும் வகையில், விளம்பர பலகைகள் வைப்பது அதிகரித்து வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், கிழக்கு கடற்கரை சாலை இரண்டு சந்திப்பு பகுதிகளுடன் அமைந்துள்ளது.மாமல்லபுரம் புறவழி சந்திப்பு பகுதி, ஆபத்தான வளைவுடன் அமைந்து, உட்புற சாலை இணைகிறது.பூஞ்சேரி சந்திப்பு பகுதியும்

மாமல்லபுரம் : மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதி களில், வாகன ஓட்டுனர்கள் கவனம் சிதறும் வகையில், விளம்பர பலகைகள் வைப்பது அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், கிழக்கு கடற்கரை சாலை இரண்டு சந்திப்பு பகுதிகளுடன் அமைந்துள்ளது.மாமல்லபுரம் புறவழி சந்திப்பு பகுதி, ஆபத்தான வளைவுடன் அமைந்து, உட்புற சாலை இணைகிறது.பூஞ்சேரி சந்திப்பு பகுதியும் ஆபத்தான வளைவுடன் அமைந்து, செங்கல்பட்டு, பழைய மாமல்லபுரம் சாலைகள் இணைகின்றன.

இரு சந்திப்பு பகுதிகளிலும் வாகனங்கள் தாறுமாறாக கடந்து, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் மற்றும் போலீசார் நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.எனினும் இத்தகைய சந்திப்புகளில், வாகன பயணியர், பஸ் மற்றும் கன ரக வாகன ஓட்டுனர்களின் கவனம் சிதறும் வகையில், உயரமான விளம்பர பலகைகள் வைப்பது அதிகரித்து வருகிறது.விபத்து பகுதியில், இத்தகைய பலகைகள் அமைப்பதை, அரசு துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்2003ம் ஆண்டு அரசாணைஎண் 47, ஊராட்சிப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி,பஞ்சாயத்து ராஜ் துறையின்2009ம் ஆண்டு அரசாணைஎண் 41 ஆகியவற்றின்படி, உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய கட்டணம்செலுத்தி அனுமதி பெற்று அமைக்க வேண்டும்.அவ்வாறு அனுமதி பெற்று வைத்தாலும், பெரிய விளம்பர பேனர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X