பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா அலுவலகங்களில் குறைகேட்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
ஊரடங்கு அமலில் உள்ளதால், திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திற்கு, மனு கொடுக்க நேரில் வர வேண்டாம். அந்தந்த தாலுகா அலுவலகத்திலேயே மனு அளிக்கலாம் என, கலெக்டர் அறிவித்தார். இதன் படி தாலுகா அலுவலகங்களில் நேற்று மனுக்கள் பெறப்பட்டன.அவிநாசி தாலுகா அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதலே, மக்கள் குவிந்தனர். பல்வேறு கோரிக்கை அடங்கிய மனு வழங்கினர்.இதில், இலவச
 தாலுகா அலுவலகங்களில் குறைகேட்பு

ஊரடங்கு அமலில் உள்ளதால், திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திற்கு, மனு கொடுக்க நேரில் வர வேண்டாம். அந்தந்த தாலுகா அலுவலகத்திலேயே மனு அளிக்கலாம் என, கலெக்டர் அறிவித்தார். இதன் படி தாலுகா அலுவலகங்களில் நேற்று மனுக்கள் பெறப்பட்டன.அவிநாசி தாலுகா அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதலே, மக்கள் குவிந்தனர். பல்வேறு கோரிக்கை அடங்கிய மனு வழங்கினர்.இதில், இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மட்டும், நுாற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன. தாசில்தார் ராகவி, மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்கள், அந்தந்த பகுதிக்குட்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டது. இதேபோல், பல்வேறு தாலுகா அலுவலகங்களிலும், மனுக்கள் பெறப்பட்டன.கலெக்டர் ஆபீசிலும்...கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், ஒவ்வொரு வாகனங்களையும் தடுத்த போலீசார், தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்குமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். திரும்பி சென்ற மக்கள், கோர்ட் செல்லும் ரோடு வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் வந்து மனு கொடுத்தனர்.தொற்று அபாயத்தை மறந்து, வளாகத்தின் பின்புற 'போர்டிகோ' வில், ஒரே நேரத்தில் 300க்கும் அதிகமானவர்கள் கூட்டமாக காத்திருந்து மனு கொடுத்தனர். மனுவை கொடுத்துவிட்டு செல்லுங்கள், மொபைல் போனுக்கு பதிவு எண் அனுப்பி வைக்கப்படும் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.இருப்பினும், மக்கள் கலைந்து செல்லாமல், நீண்ட நேரம் காத்திருந்து, ரசீது பெற்றுச்சென்றனர். 'அந்தந்த தாலுகா அலுவகத்தில் மனு கொடுக்கலாம்; 0421 2969999, 97000 41114 என்ற எண்களில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்' என, கலெக்டர் அறிவித்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X