சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஞ்சியில் 13 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐந்து இடங்களில் துவங்க இருக்கிறது என, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சொர்ணவாரி மற்றும் பின் சொர்ணவாரி பருவத்தில், 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர். அவை, அறுவடை செய்யும் பணி துவங்கி உள்ளது.

வாலாஜாபாத் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐந்து இடங்களில் துவங்க இருக்கிறது என, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சொர்ணவாரி மற்றும் பின் சொர்ணவாரி பருவத்தில், 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர். அவை, அறுவடை செய்யும் பணி துவங்கி உள்ளது. நுகர்பொருள் வாணிப கழத்தின் மூலமாக திறக்க வேண்டிய நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, தென்னேரி, அகரம், மஞ்சமேடு உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை குவியலாக கொட்டி உள்ளனர்.

ஒரு சிலர் வந்த வரைக்கும் வரட்டும் என, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இதையடுத்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கோவிந்தவாடி, முசரவாக்கம், வேளியூர், விஷார், தென்னேரி, திருவங்கரணை, அரும்புலியூர், மருதம், மேனலுார், எடைபாளையம், அத்தியூர்மேல்துாளி, தாமல், மஞ்சமேடு உள்ளிட்ட 13 இடங்களில் துவக்கி உள்ளனர்.மேலும், திருமுக்கூடல், மஞ்சமேடு, மேல் அம்பி உள்ளிட்ட ஐந்து இடங்களில் துவங்க உள்ளது என, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X