திருப்பூர்:குடிமைமாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி வீடுகள் கட்டி, ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பயனாளிகள், 10 சதவீத பங்களிப்பை செலுத்தி, வீட்டில் வசிக்கலாம்.நெருப்பெரிச்சல், வீரபாண்டி பகுதிகளில் கட்டிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அடுக்குமாடி வீடு வேண்டுமென, தொடர்ந்து மனு கொடுக்கின்றனர்.கடந்த வாரத்தை போல், நேற்றும், நுாற்றுக்கணக்கான மக்கள், கலெக்டர் அலுவலகம் சென்றிருந்தனர்.திருப்பூர் போயம்பாளையம் பிரிவு, சக்திநகரில் இயங்கும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண், மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டிருந்தது.அலுவலக தொலைபேசி எண் தவறாக எழுதியிருந்ததால், தொலைபேசி மூலம் விசாரிக்க முடியாமல், பொதுமக்கள் அவதிப்பட்டனர். குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'போயம்பாளையம் பிரிவில் குழி தோண்டியதில், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது; விரைவில் சரியாகிவிடும்.தேவையான விவரங்களை, 0421 2480847 என்ற எண்ணிலோ, நேரிலோ வந்து கேட்டறியலாம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE