கலெக்டர் ஐயா... வெளியே வாங்க!| Dinamalar

'கலெக்டர் ஐயா... வெளியே வாங்க!'

Added : ஆக 24, 2021
திருப்பூர்:முதலிபாளையம் மானுார் பிரிவு, விஜயாபுரம் உட்பட, நகரை சுற்றியுள்ள பகுதிகளில், ஒரு புரமோட்டர் நிறுவனம் சார்பில், டி.கே.எஸ்., நகர் அமைக்கப்பட்டது.முழு பணமும் செலுத்தி, ஆறு ஆண்டுகளாகியும், வீட்டுமனையை கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றுவதாக, 200க்கும் அதிகமான மக்கள், நேற்று கலெக்டரிடம் முறையிட வந்திருந்தனர். கலெக்டரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கையை தெரிவிக்க
 'கலெக்டர் ஐயா... வெளியே வாங்க!'

திருப்பூர்:முதலிபாளையம் மானுார் பிரிவு, விஜயாபுரம் உட்பட, நகரை சுற்றியுள்ள பகுதிகளில், ஒரு புரமோட்டர் நிறுவனம் சார்பில், டி.கே.எஸ்., நகர் அமைக்கப்பட்டது.முழு பணமும் செலுத்தி, ஆறு ஆண்டுகளாகியும், வீட்டுமனையை கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றுவதாக, 200க்கும் அதிகமான மக்கள், நேற்று கலெக்டரிடம் முறையிட வந்திருந்தனர். கலெக்டரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கையை தெரிவிக்க வேண்டுமென, தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். போலீசார் பேரிகார்டுகளுடன் தடுப்பு ஏற்படுத்தினர்.பொறுமை இழந்த மக்கள், 'கலெக்டர் ஐயா... வெளியே வாங்க!' என கோஷமிட துவங்கினர். அதன்பின், கலெக்டர் வினீத், சிலரை அழைத்து பேசினார். டி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைத்து, விரைவில் விசாரிக்கப்படும். கிரயம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படுமென உறுதி அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X