பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சியாகிறதா அவிநாசி?

Added : ஆக 24, 2021
Share
Advertisement
அவிநாசி:தமிழகத்தில், சிறப்புநிலை அந்தஸ்து பெற்ற, 29 பேரூராட்சிகளை, நகராட்சியாக தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிகளும் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான பட்டியலில் உள்ளன.பல பேரூராட்சிகளில், செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவிநாசி பேரூராட்சி உள்ளிட்ட சில

அவிநாசி:தமிழகத்தில், சிறப்புநிலை அந்தஸ்து பெற்ற, 29 பேரூராட்சிகளை, நகராட்சியாக தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிகளும் நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கான பட்டியலில் உள்ளன.பல பேரூராட்சிகளில், செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவிநாசி பேரூராட்சி உள்ளிட்ட சில பேரூராட்சிகளில், செயல் அலுவலர்கள் இனி, பொறுப்பேற்காமல் உள்ளனர்.'நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்; அவ்வாறு அறிவிக்கப்பட்டால், மீண்டும் பணிமாறுதல் நடவடிக்கை இருக்கும்,' என்ற எதிர்பார்ப்பு தான், பணியை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. சட்டசபை கூட்டத்தொடரில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X