தினக்கூலி பணியாளர்கள் காஞ்சியில் போராட்டம்| Dinamalar

தினக்கூலி பணியாளர்கள் காஞ்சியில் போராட்டம்

Added : ஆக 24, 2021
Share
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் 'டெங்கு' காய்ச்சலை தடுக்கும் வகையில், கொசு புழு ஒழிப்பதற்காக தினக்கூலி அடிப்படையில் 180 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வீடு வீடாக சென்று, மழை நீர் தேங்கும் பொருட்களை அகற்றும் பணி செய்து வந்தனர்.இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம், நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அந்த ஊழியர்கள், நான்கு மாத

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் 'டெங்கு' காய்ச்சலை தடுக்கும் வகையில், கொசு புழு ஒழிப்பதற்காக தினக்கூலி அடிப்படையில் 180 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் வீடு வீடாக சென்று, மழை நீர் தேங்கும் பொருட்களை அகற்றும் பணி செய்து வந்தனர்.

இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம், நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அந்த ஊழியர்கள், நான்கு மாத ஊதியம் வழங்கக் கோரி, நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, மறியல் செய்தனர். நகர் நல அலுவலர் முத்து, அவர்களிடம் பேச்சுநடத்தி, ஊதியம் வழங்குவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X