சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கை ஊரக தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தீவிரம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டு மாவட்ட, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் கவனம் செலுத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக பகுதி உள்ளாட்சித் தேர்தல் நடத்த, தற்போது ஏற்பாடு நடக்கிறது. இத்தேர்தலில், உள்ளாட்சி மன்றங்களை கைப்பற்ற, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் தீவிரம் காட்டுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளில், தி.மு.க.,

திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டு மாவட்ட, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் கவனம் செலுத்துகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக பகுதி உள்ளாட்சித் தேர்தல் நடத்த, தற்போது ஏற்பாடு நடக்கிறது. இத்தேர்தலில், உள்ளாட்சி மன்றங்களை கைப்பற்ற, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் தீவிரம் காட்டுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி கட்சி வென்று, மதுராந்தகம் தனித்தொகுதியை மட்டுமே, அ.தி.மு.க., கைப்பற்றியது.இச்சூழலில், உள்ளாட்சித் தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்ற, இவ்விரு கட்சிகளின் நிர்வாகிகளும், ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினர்; ஒன்றியக்குழு வார்டு பகுதி கூட்டம் நடத்தி வருகின்றனர்.

தி.மு.க., முக்கிய பகுதி கூட்டங்களில், ஊரக தொழில் அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர். 'நாம் ஆளுங்கட்சியாக உள்ளதால், உள்ளாட்சி நிர்வாகத்திலும், நாம்தான் வெற்றிபெற வேண்டும்; அ.தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும். நாம் வென்றால்தான், சிக்கல் இல்லாமல் நிர்வாகம் நடத்தவே முடியும்' என, கட்சியினரிடம் விளக்குகின்றனர்.அ.தி.மு.க., கூட்டங்களில், அக்கட்சி மாவட்ட செயலர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

அவர்கள், 'சட்டசபை தேர்தலில், நாம் முற்றிலும் தோற்கவில்லை. 'தி.மு.க., ஆட்சியில் இருப்பினும் உள்ளாட்சியில் நாம் வெற்றிபெற்றே தீர வேண்டும்' என்கின்றனர்.இந்த தேர்தலில், கட்சியைவிட வேட்பாளரின் சமூக செல்வாக்கையே மக்கள் கவனித்து, ஓட்டு போடுவர். அந்தந்த பகுதியில் செல்வாக்கான நபர்களையே, கட்சி நிறுத்தும். அவர்களை தவிர, போட்டியாக வேறு யாரும் போட்டியிட கூடாது என, கட்சியினர் பேசுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X