காபூல் விமானநிலைய கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிக்கல்

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டை முன்னதாக தாலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியதை அடுத்து அங்கு பல்வேறு விதமான பிரச்னைகள் நாளுக்கு நாள் எழுந்த வண்ணம் உள்ளது.இதனைத்தொடர்ந்து சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு தாலிபான்கள்மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் வாழ்வாதாரம் இன்றி உரிய மருத்துவ

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டை முன்னதாக தாலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியதை அடுத்து அங்கு பல்வேறு விதமான பிரச்னைகள் நாளுக்கு நாள் எழுந்த வண்ணம் உள்ளது.



latest tamil news


இதனைத்தொடர்ந்து சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு தாலிபான்கள்மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் வாழ்வாதாரம் இன்றி உரிய மருத்துவ சிகிச்சை இன்றி தவித்து வருகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான கைக்குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு மருத்துவ உபகரணங்கள், குழந்தைகளுக்கான சத்து உணவுகள் ஆகியவற்றை அனுப்பி வருவது வழக்கம். தற்போது தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உலக சுகாதார அமைப்பு அனுப்பும் பொருட்களை குடிமக்களுக்கு விநியோகிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக நிவாரண பொருட்களை நம்பி இருக்கும் அடித்தட்டு ஆப்கன் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிவாரண பொருட்கள் துபாய் நகரிலுள்ள கிடங்குகளில் தற்காலிகமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news


இந்த பொருட்களை தங்கள் நாட்டுக்குள் ஐக்கிய அரபு அமீரகம் அனுமதித்துள்ளது ஆறுதலான விஷயம். ஆப்கானிஸ்தானில் வாழும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மருத்துவ மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுவதாக யுனிசெப் இயக்குனர் ஹென்ரிடா ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதேநிலை தொடர்ந்தால் மருத்துவம் மற்றும் உணவு பஞ்சம் காரணமாக மேலும் பல ஆப்கன் மக்கள் மரணமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-202107:44:25 IST Report Abuse
Sathya Why Chinese WHO worried about Afghans. WHO should be worrying about Taliban or Chinese
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X