பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம். கார்டு பெறுவதற்கு கிராமப்புற அஞ்சல் சேவை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : கிராமப்புற அஞ்ல் வாடிக்கையாளரும், இனி, ஏ.டி.எம்., கார்டு பெறுவதற்கு, அந்தந்த தபால் நிலையங்களில், விண்ணப்பிக்கலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ், இரண்டு தலைமை தபால் நிலையம், 53 துணை அஞ்சலகம், 271 கிராமப்புற தபால் நிலையங்கள் உள்ளன.இதில், தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

காஞ்சிபுரம் : கிராமப்புற அஞ்ல் வாடிக்கையாளரும், இனி, ஏ.டி.எம்., கார்டு பெறுவதற்கு, அந்தந்த தபால் நிலையங்களில், விண்ணப்பிக்கலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ், இரண்டு தலைமை தபால் நிலையம், 53 துணை அஞ்சலகம், 271 கிராமப்புற தபால் நிலையங்கள் உள்ளன.இதில், தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே ஏ.டி.எம்., கார்டு பெற்றிருந்தனர்.தற்போது, கிராமப்புற அஞ்சலகங்களில், சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரும், அந்தந்த கிராமப்புற தபால் நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று, குறுகிய காலகட்டத்திற்குள், ஏ.டி.எம்., கார்டுகளை தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.இதில், வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில், 500 ரூபாய் எப்போதும் இருப்பில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என, அஞ்சல் துறை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X