பொது செய்தி

தமிழ்நாடு

உத்திரமேரூர் பள்ளிகளில் துாய்மை பணி தீவிரம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி, செப்., 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உத்திரமேரூர் ஒன்றிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துாய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது.கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், செப்., 1ல், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவ -

உத்திரமேரூர் : ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி, செப்., 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உத்திரமேரூர் ஒன்றிய அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துாய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது.கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதில், செப்., 1ல், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவ - மாணவியருக்கு நேரடி வகுப்பு நடத்த, பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகள் திறக்கும்போது, பள்ளியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அரசின், வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறப்பதற்கான ஆயத்தப்பணிகளில் அந்தந்த பள்ளி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.அதன்படி, சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத்திடல், வளாகம், வகுப்பறை, ஆய்வகம், நுாலகம், கழிப்பறை உள்ளிட்ட இடங்கள் துாய்மைப்படுத்தப்பட்டு 'பிளீச்சிங் பவுடர்' துாவப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணியில், துாய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X