தமிழ்நாடு

எல்லாம் போச்சு! புதர் ,ஆக்கிரமிப்பில் மாயமான விவசாய களங்கள்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் விவசாய களங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. இவற்றை புதியதாக அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.கிராமங்கள் நிறைந்த மாவட்டமான இங்கு கிணறு, கண்மாய் பாசனம் ,தடுப்பனை பாசனம், அணை கட்டுபாசனம் மூலமாக விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.நெல், எள், உளுந்தம் பயறு, பாசிப்பயறு ,மக்காச்சோளம்

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் விவசாய களங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் புதர்கள் மண்டி காணப்படுகின்றன. இவற்றை புதியதாக அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.

கிராமங்கள் நிறைந்த மாவட்டமான இங்கு கிணறு, கண்மாய் பாசனம் ,தடுப்பனை பாசனம், அணை கட்டுபாசனம் மூலமாக விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.நெல், எள், உளுந்தம் பயறு, பாசிப்பயறு ,மக்காச்சோளம் ,பருத்தி ,தினை , சாமை உள்ளிட்ட பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இப்பயிர் வகைகளை உலர்த்துவதற்கு கிராமப்புறங்களில் களங்கள் இல்லை .

பெரும்பாலான கிராம மக்கள் போக்குவரத்து நடைபெறும் ரோடுகளையே களங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் ,மூன்று சக்கரம் கொண்ட ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் போன்றவை விவசாய பயிர்கள் மீது ஏறி இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துகள் ஏற்படுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் பாதிக்கின்றனர். கிராமங்களில் பயறு, தானிய வகைகளை உலர்த்துவதற்காகவும் தானியங்களை தனித்தனியாக பிரிக்கவும் விவசாய களங்களை கடந்த காலங்களில் அரசு ஏற்படுத்தித் தந்தது. இந்த களங்கள் தற்போது புதர்மண்டி காணப்படுகின்றன .சில ஆக்கிரமிப்பில் மாயமாகிவிட்டது.

இவற்றை கண்டறிந்து சீரமைப்பது அவசியமாகிறது. இதன் மூலம் ரோடுகளில் பயிறு, தானியவைகளை உலர்த்தும் நடைமுறை மாறும். விவசாயத்துறை, தோட்டத்துறையுடன் இணைந்து போதிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்...............

பயிர்கள் சேதமின்றி வீடு வந்து சேரும்

மக்காச்சோளம் , எள், உளுந்தம் பயறு பாசிப்பயறு போன்ற தானியங்களை பிரிக்க விவசாயகளம் அவசிய தேவையாகும். விவசாயிகள் ரோட்டில் நின்று செடிகளை உலர்த்தும் போது வாகனம் மோதி விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. துாசி பறந்து வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதை தடுக்க, போதிய களங்கள் அமைப்பது அவசியம் ஆகிறது.
- சோலையப்பன், விவசாயி. சாத்துார்.....................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X