அரசு கல்லூரி 'அட்மிஷன்' நிறுத்தம்: அலட்சியத்தால் மாணவர்கள் அவதி

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (8)
Advertisement
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நேற்று துவங்குவதாக இருந்த மாணவர் சேர்க்கை, திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு பட்டப்படிப்புக்கு, கவுன்சிலிங் முறையில், மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர் என, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.அதன்பின், உயர் கல்வி துறை செயலர் கார்த்திகேயன்
அரசு கல்லூரி, அட்மிஷன், நிறுத்தம், அலட்சியம்,மாணவர்கள் , அவதி

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நேற்று துவங்குவதாக இருந்த மாணவர் சேர்க்கை, திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.



தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு பட்டப்படிப்புக்கு, கவுன்சிலிங் முறையில், மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர் என, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.அதன்பின், உயர் கல்வி துறை செயலர் கார்த்திகேயன் உத்தரவின்படி, கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில், கல்லுாரி மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி சார்பில், www.tngasa.in என்ற, இணையதளத்தில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஆக., 10 வரை மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதையடுத்து, கல்லுாரி சேர்க்கை இணையதளம் மூடப்பட்டது. அதில், எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.


latest tamil news




ஏமாற்றம்


இந்நிலையில், நேற்று முதல் மாணவர் சேர்க்கை துவங்கும்; தரவரிசை பட்டியல் அடிப்படையில், மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, கவுன்சிலிங்படி இடங்கள் ஒதுக்கப்படும் என, கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் அறிவித்தார்.அதன்படி, விண்ணப்பித்த மாணவ, மாணவியர், நேற்று அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு சென்றால், அங்கு நுழைவு வாயில்கள் இழுத்து பூட்டப்பட்டு, காவலாளிகள் மற்றும் பணியாளர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை, உள்ளே விடாமல், வீட்டுக்கு செல்லுமாறு விரட்டி விட்டனர்.


அலைக்கழிப்பு



'மாணவர் சேர்க்கை குறித்த தரவரிசை பட்டியல், கல்லுாரி கல்வித்துறை இணையதளத்தில் வெளியாகும்; கவுன்சிலிங் குறித்து தகவல் வெளியானதும் வந்தால் போதும்' எனக்கூறி, கல்லுாரிக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனால், கல்லுாரி நிர்வாகங்கள் தெரிவித்த இணையதளம், ஒரு வாரமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், எப்போது தரவரிசை பட்டியல் வெளியாகும் என, எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை


.பொறுப்பில்லை


இதுகுறித்து, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூறியதாவது:இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி மட்டுமே சரியாக செய்யப்பட்டது. அதில், தொலைபேசி எண், இ- - மெயில் முகவரி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், விணணப்பித்த பின், எந்த தகவலும் வரவில்லை. இணையதளமும் முடங்கியுள்ளது.தனியார் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை வேகமாக முடிந்து, இடங்கள் நிரம்பி வருகின்றன. அரசு கல்லுாரியில் வேகமாக சேர்க்கையை முடித்தால் தான், அரசு கல்லுாரியில் இடம் கிடைக்கா விட்டால், தனியார் கல்லுாரிகளில் மீதமுள்ள இடங்களிலாவது சேர முடியும்.ஆனால், அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை துவங்காமல் உள்ளதால், பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளோம். கல்லுாரி சார்பில், எந்த தகவல் தொடர்பும் இல்லாததால், ஒவ்வொரு நாளும் கல்லுாரிக்கு வந்து, திரும்பி செல்லும் நிலை உள்ளது.எந்த பொறுப்புமின்றி, கல்லுாரி நிர்வாகத்தினரும், கல்லுாரி கல்வி இயக்குனரகம் மற்றும் உயர் கல்வி துறை செயல்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஆக-202116:46:02 IST Report Abuse
மதுமிதா Something.... wrong
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
24-ஆக-202114:21:53 IST Report Abuse
Raj இனி இப்படி தான். இவர்கள் என்ன நினைகிறார்களோ அது தான் நடக்கும்.
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
24-ஆக-202110:58:44 IST Report Abuse
S. Bharani அங்கு சென்று படிக்க ஒரு பயனும் இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X