அரசியல் செய்தி

தமிழ்நாடு

"தமிழக நிதி அமைச்சர் அழகு தமிழில் பேசி எப்படியும் கடன் வாங்கி விடுவார்..."

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
தி.மு.க.,வின் 100 நாள் சாதனை என்பது, முதல் 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான். 2006 வரை வெறும் 28 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்தது. இலவச கலர் 'டிவி' வழங்குவதாக கூறிய பிறகு தான் கடனளவு அதிகரிக்க துவங்கியது. ஆகவே பொறுப்புடன் அரசு செயல்படவில்லையெனில், தமிழகம் நாளை கடன் வாங்கும் தகுதியை இழக்கும்.-பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா 'தமிழக

தி.மு.க.,வின் 100 நாள் சாதனை என்பது, முதல் 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான். 2006 வரை வெறும் 28 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்தது. இலவச கலர் 'டிவி' வழங்குவதாக கூறிய பிறகு தான் கடனளவு அதிகரிக்க துவங்கியது. ஆகவே பொறுப்புடன் அரசு செயல்படவில்லையெனில், தமிழகம் நாளை கடன் வாங்கும் தகுதியை இழக்கும்.



latest tamil news



-பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா


'தமிழக நிதியமைச்சர் அழகு தமிழில் பேசி, எப்படியும் கடன் வாங்கி விடுவார்; கவலைப்பட வேண்டாம்...' என, கூறத் தோன்றும் வகையில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேச்சு



கேரளாவில் வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதே போல் தமிழக வணிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா


'கேரளாவில் கம்யூ., வணிகர்கள் ஒரே குடையின் கீழ் நின்று, கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளனர். ஆனால், நம் மாநிலத்தில் அப்படியில்லையே; பல சங்கங்கள் உள்ளனவே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி



தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை, தேசிய தலைமை துவக்கி விட்டது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயல்பாடு, அவர்களது கடந்த கால பணி குறித்து குழு அமைத்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
-காங்., அகில இந்திய செயலர் மெய்யப்பன்


'தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து உங்கள் கட்சியில் தேசிய தலைமைக்குத் தான் எவ்வளவு அக்கறை... அப்படியே, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி, தனியே நின்று விடுவீர்கள் போலிருக்கிறதே...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், காங்., அகில இந்திய செயலர் மெய்யப்பன் பேட்டி



தேர்தலின் போது, தி.மு.க., அறிவித்த வாக்குறுதிகளை பற்றி, கவலைப்படவில்லை. இதனால், வாக்குறுதிகளை செயல்படுத்துவரா; மாட்டார்களா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.


latest tamil news


-த.மா.கா., தலைவர் வாசன்


'உண்மை தான். தி.மு.க., அரசு திசைமாறி, பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறது. அதனால் அந்த எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது...' என, ஒப்புக் கொள்ளத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி



வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டதையே பெருமையாக சொல்லிக் கொள்ளும் தி.மு.க., அரசு, நிதிச்சுமை என்று கூறி, நெல் விவசாயிகளின் உரிமையை பறிக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது.


latest tamil news



-அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


'ஆமாம். முதலில், நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ள நெல்லை விலைக்கு வாங்கி, விவசாயிகளுக்கு தமிழக அரசு பணத்தை கொடுக்க வேண்டும்...' என கூறத் துாண்டும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-ஆக-202104:07:17 IST Report Abuse
meenakshisundaram நிதி அமைச்சர் -இதற்கு அர்த்தமே என்னவென்ரால் இவர் கருணாநிதி ,உதவானிதி ஆகியோருக்கான அமைச்சர் என்பதே
Rate this:
Cancel
25-ஆக-202102:44:07 IST Report Abuse
G KARTHIKEYAN அவரு அழகு தமிழ்ல பேசுறது இருக்கட்டும்...... வெட்க கேடு
Rate this:
Cancel
25-ஆக-202102:44:10 IST Report Abuse
G KARTHIKEYAN ... வெட்க கேடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X