மெரினாவில் கருணாநிதிக்கு ரூ.39 கோடியில் நினைவிடம்: முதல்வர் அறிவிப்பு

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (113) | |
Advertisement
சென்னை: ‛‛மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும்,'' என்று, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் மாதிரி புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.சென்னை கலைவாணர் அரங்கில் செயல்பட்டு வரும் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய (ஆக.,24) கூட்டத்தொடரின்போது சட்டசபை விதி எண் 110-ன் கீழ்
Tamilnadu, Memorial, Karunanidhi, Chennai, Marina, CM, Stalin, கருணாநிதி, நினைவிடம், மெரினா, முதல்வர், ஸ்டாலின்,

சென்னை: ‛‛மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும்,'' என்று, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் மாதிரி புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் செயல்பட்டு வரும் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்றைய (ஆக.,24) கூட்டத்தொடரின்போது சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும். மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது.


latest tamil news


இன்று நாம் பாக்கும் தமிழகம் கருணாநிதி உருவாக்கியது. 5 முறை முதல்வராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர். 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கருணாநிதி. தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை. என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை. இவ்வாறு அவர் கூறினார்.பன்னீர்செல்வம் புகழாரம்


latest tamil news


கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கலைஞருக்கு நினைவிடம் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். சமுதாய சீர்திருத்த கருத்துகளுக்கு உதாரணம் பராசக்தி பட வசனம். எனது தந்தை, கருணாநிதியின் தீவிர பக்தர். நாமெல்லாம் அண்ணாதுரை குடையின் கீழ் அரசியல் பாடம் கற்றவர்கள். அவர் பற்றிய அனைத்து சிறப்புகளும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.மாதிரி படம்:


latest tamil newsமெரினாவில் அமையவுள்ள கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஆக-202104:36:48 IST Report Abuse
meenakshisundaram அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடு நெற்றியிலே 'பட்டை நாமம் ' அந்த பணத்தில் நினைவு சின்னம் -அதுவும் தமிழகத்தில் ஜாதி வெறி ,மதுவை புகுத்திய நாகரிக கொள்ளையனுக்கு ?-வேண்டுமென்றால் அவிங்க ளோடே 'அறிவாலயத்தில் சொந்தப்பணத்திலே கட்டிக்கொள்ள எந்த மரத்தமிழனும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டான் .நீதி மன்றங்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் -உலகத்திலே இரண்டாவது அழகிய கடற்கரை இன்னும் அசிங்கப்படுவதா ?தமிழன் பெருமைப்படக்கூடிய சின்னம் ஒன்றான கடற்கரையை சுற்று சூழல் துறை பாதுகாப்பது தலையாய கடைமை.அன்று வாழ்நத சோழ மன்னன் மாமல்லபுரத்தை அழகாக்கிநான் .அப்புறம் வந்த இந்த பச்சை தமிழர்கள் கடற்கரையையே அசிங்கப்படுத்தலாமா ?இயற்கையின் அன்பளிப்பை இனிதாக்க வேண்டும் சென்னை வாழும் தமிழன் தந்து துயரை சற்றேனும் மறக்க நினைத்து வந்தால் அங்கேயுமா ?இனி வரும் தலைமுறைகளாவது' இந்த 'மாதிரி தலைவர்களை (?) மறக்க வேண்டாமா ?
Rate this:
Cancel
Gopalakrishnan Thyagarajan - Kuwait City,லிபியா
28-ஆக-202114:34:23 IST Report Abuse
Gopalakrishnan Thyagarajan மரீனா மெதுவாக இடுகாடாக மாறுகிறது. ஏன் இந்த மற்றம். குழவிகளுக்கும் பெரியாருக்கும் இடமில்லை இந்த இடுகாட்டில். மிலிட்டரி ஆட்சி வந்து எல்லாவற்றையும் இடிக்க வேண்டும். எல்லா லீடர்களும் பொது மக்களே அப்படியிருக்க ஏன் மெரினாவில் சமாதி
Rate this:
Cancel
kumar - Doha,கத்தார்
28-ஆக-202109:56:04 IST Report Abuse
kumar நீதி மன்றம் தலையிட்டு அது எந்த பணத்தில் கட்டப்படுகின்றது என்று மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இன்னும் எத்தனை காலத்துக்கு தன் குடும்பத்துக்கே தமிழ் நாட்டை தாரம் வார்ப்பார்கள். இவ்வளவு கடன் இருக்கும்போது இது தேவையா? எவன் அப்பன் வீட்டு சொத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X