இத்தாலியில் வெறும் ரூ.87க்கு வீடு!

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (13)
Advertisement
ரோம்: இத்தாலியில் சலேமி பகுதியில் ஒரு யூரோவுக்கு (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.87க்கு) வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தனக்கென ஒரு சொந்தவீடு வேண்டும் என்பது அனைவரின் கனவு. இதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்களுக்கென சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என கனவுடன் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். வீடு வாங்க மக்கள் தங்கள் வாழ்நாள்

ரோம்: இத்தாலியில் சலேமி பகுதியில் ஒரு யூரோவுக்கு (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.87க்கு) வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news



தனக்கென ஒரு சொந்தவீடு வேண்டும் என்பது அனைவரின் கனவு. இதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்களுக்கென சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என கனவுடன் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். வீடு வாங்க மக்கள் தங்கள் வாழ்நாள் வருமானத்தில் பெரும்பகுதியை முதலீடு செய்கின்றனர். சிலர் கடன் பெற்று வீடு வாங்கி, அதை வாழ்நாள் முழுவதும் அடைக்கின்றனர். இயல்பு இப்படியிருக்க, இத்தாலியில் ஒரு வீடு வெறும் ஒரு யூரோ (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ.87) விலைக்கு விற்கப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா?. ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இவ்வளவு குறைந்த விலைக்கு கூட யாரும் அந்த வீட்டை வாங்கி, அங்கு வாழ விரும்பவில்லை என்பது தான்.


latest tamil news



இத்தாலி நாட்டின் தென்மேற்கில் உள்ள சிசிலி நகரத்தின் சலேமி பகுதியில் தான் இந்த குறைந்த விலை வீடுகள், அரசால் ஏலம் விடப்படுகின்றன. 1968ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு, சலேமி நகரத்தின் மக்கள் தொகை கணிசமாக குறைந்துள்ளது. இதையடுத்து முன்பு போலவே நகரங்களில் மீண்டும் மக்கள் அதிக அளவில் இங்கு குடியேற வேண்டும் என்ற முயற்சியில், குறைந்த விலையில் அங்கு வீடுகள் விற்கப்படுகின்றன. 'தற்போது வரை 400க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த வீடுகளை வாங்க யாரும் முன்வரவில்லை. விரைவில் இது சுற்றுலா நகராக மாறும்' என, அந்நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
25-ஆக-202107:56:08 IST Report Abuse
P Sundaramurthy அதை பராமரிக்க மாதம் 80 லக்ஷம் செலவாகும் . அதுதான் ஒப்பந்தமே
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-ஆக-202117:06:47 IST Report Abuse
Natarajan Ramanathan நம்ம பேமஸ் டபுள் வாட்ச் டக்ளஸ் புண்ணியத்தில் 2008ல் அமெரிக்க நிதி நிறுவனம் லேமேன் பிரதர்ஸ் திவால் ஆன போது சில அமெரிக்க மாநிலங்களில் வீடுகள் 1500 டாலருக்கு கூட வாங்க ஆள் இல்லாமல் இருந்ததாக செய்தி. அந்த நிலை தமிழகத்திலும் வரக்கூடும்.....
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
24-ஆக-202116:56:10 IST Report Abuse
THINAKAREN KARAMANI " 87 ரூபாய்க்கு கூட யாரும் அந்த வீட்டை வாங்க விரும்பவில்லை ". .வியக்க வைக்கும் செய்தி இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X