ஆப்கனில் மோசமடையும் மனிதாபிமான நிலை: யுனிசெப் கவலை

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஜெனிவா: 'ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கோவிட் பெருந் தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு, மனிதாபிமான நிலை மேலும் மோசமடையும்' என, ஐ.நா.,வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.யுனிசெப் இயக்குநர் ஹென்ரிட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே ஒரு கோடி

ஜெனிவா: 'ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கோவிட் பெருந் தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு, மனிதாபிமான நிலை மேலும் மோசமடையும்' என, ஐ.நா.,வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.latest tamil newsயுனிசெப் இயக்குநர் ஹென்ரிட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே ஒரு கோடி குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு 10 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 22 லட்சம் சிறுமிகள் உள்பட 42 லட்சம் சிறார்கள் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். ஆப்கன் குழந்தைகள் எதிர்கொள்ளும் கசப்பான உண்மை இது. தற்போதைய அரசியல் மாற்றங்களால் இது மேலும் மோசமடையும்.


latest tamil newsஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கோவிட் பெருந் தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு மனிதாபிமான நிலை மேலும் மோசமடையும். இருந்தும் நாங்கள் அங்கு சென்றடைய முடியாத பகுதிகளுக்கும் சென்று உதவிகளை அளிக்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-ஆக-202108:21:17 IST Report Abuse
Sampath Kumar மதம் நல்ல தான் தமிழ் வார்த்தை உள்ளது இந்த மதம் பிடித்து விட்டால் மனிதநேயமாவது மண்ணாங்கட்டியாவது மதத்தை உயர்த்திப்பிடிக்கும் எந்த நாடும் ஒருபடப்போவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் கூடிய விரைவில் நம் நாட்டிலும் நடக்க வாய் பு ள்ளது \
Rate this:
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
25-ஆக-202114:43:55 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRNமதத்துக்காக லட்சக்க் கணக்கானவர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்றது ,கொல்வது, உண்டு கொழுத்துக் கொண்டிருக்கும் நாட்டுக்கு இண்டகம் செய்வது, கொடுமை,,, கொலை செய்து தனது கொள்கையை மட்டுமே கடைபிடிக்கச் சொல்வது, சகிப்புத் தன்மைக்கு இடங்கொடாமை -இவை போன்றவற்றின் எல்லை அழிவு தான். மனிதன் மனிதனாக வாழ முயல வில்லை என்றால் அழிவு தவிர்க்க முடியாதது....
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
24-ஆக-202117:11:25 IST Report Abuse
Vijay D Ratnam ஆப்கானிஸ்தானில் இந்த சீன வைரஸ் கொரோனா, வரப்போகும் குளிர்காலம், அரசு ஆதரவாளர்கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அரசியல் குழப்பம், அமேரிக்கா, சீனா, பாகிஸ்தான் எல்லாத்தையும் விட்டுத்தள்ளுங்க. அங்கு அதிகபட்சம் இன்னும் பத்தே பத்து நாட்களுக்குள் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படப் போகிறது. மக்கள் முழுங்குவதற்கு ஏதாவது உணவு கிடைக்காதா என்று அலைய ஆரம்பித்துவிட்டார்கள். பட்டினியில் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடியப்போகிறார்கள். உணவு கிடங்குகளில் கொஞ்சநஞ்சம் இருந்த பொருட்களை தலிபான்கள் தங்கள் உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். படிப்பறிவில்லாத தற்குறிப்பயலுவோ இந்த தலிபான்கள். குரங்கு கைல சிக்கிய பூமாலை கதி ஆகப்போகிறது ஆப்கானிஸ்தான். அந்த தாலிபான்களுக்கு ஆதரவாக நம்ம நாட்டுல கூட சில ஜென்மங்கள் குரைக்குது அதுதான் கொடுமை. சுடுகாடு ஆகப்போகிறது ஆப்கானிஸ்தான்.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
24-ஆக-202117:06:40 IST Report Abuse
SENTHIL NATHAN இங்கு உள்ள அமைதி மார்கத்தினர் அங்கு சென்று அங்கு கஷ்டப்படும் மக்களுக்கு உதவிகள் செய்யலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X