ஜெனிவா: 'ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கோவிட் பெருந் தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு, மனிதாபிமான நிலை மேலும் மோசமடையும்' என, ஐ.நா.,வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.

யுனிசெப் இயக்குநர் ஹென்ரிட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே ஒரு கோடி குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு 10 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 22 லட்சம் சிறுமிகள் உள்பட 42 லட்சம் சிறார்கள் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். ஆப்கன் குழந்தைகள் எதிர்கொள்ளும் கசப்பான உண்மை இது. தற்போதைய அரசியல் மாற்றங்களால் இது மேலும் மோசமடையும்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கோவிட் பெருந் தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு மனிதாபிமான நிலை மேலும் மோசமடையும். இருந்தும் நாங்கள் அங்கு சென்றடைய முடியாத பகுதிகளுக்கும் சென்று உதவிகளை அளிக்க இருக்கிறோம்.இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE