'அண்ணா நுாலகம் சிறப்பாக மாற்றப்படும்'

Added : ஆக 24, 2021 | |
Advertisement
சென்னை : ''சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை, இன்னும் சிறப்பானதாக மாற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:* தி.மு.க., - கிரி: அண்ணாதுரை பெயரை கட்சியிலும், உருவத்தை கொடியிலும் வைத்துள்ள கட்சி, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தை நிறுத்தியது. அண்ணா நுாற்றாண்டு

சென்னை : ''சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை, இன்னும் சிறப்பானதாக மாற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


சட்டசபையில் நடந்த விவாதம்:* தி.மு.க., - கிரி: அண்ணாதுரை பெயரை கட்சியிலும், உருவத்தை கொடியிலும் வைத்துள்ள கட்சி, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தை நிறுத்தியது. அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை பாழ்படுத்தியது. ஆனால் முதல்வர், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க., - செங்கோட்டையன்: அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்காக, அ.தி.மு.க., ஆட்சியில் ௬ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; கலையரங்கம் புதுப்பிக்கப்பட்டது. அங்கு, கல்வி தொலைக்காட்சி துவக்கப்பட்டது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின்: நீங்கள் செய்தது உண்மை. ஆனால், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டீர்கள். நீதிமன்றம் சென்று, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்ற உத்தரவு பெற்றதும் நிறுத்தினீர்கள். அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X