மாநகராட்சியானது தாம்பரம்: சட்டசபையில் அறிவிப்பு

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் தமிழக அரசு அறிவித்து உள்ளது.இது தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும்
தாம்பரம், மாநகராட்சி, சட்டசபை, நகராட்சி, அமைச்சர், அறிவிப்பு

சென்னை: தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும்.


latest tamil newsகாஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் மாநகராட்சிகள் விரிவுபடுத்தப்படும்.

பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திகிராம், கூடுவாங்சேரி,பொன்னேரி, இடங்கனசாலை, தாரமங்கலம், கோட்டகுப்பம், திருநின்றவூர், சோளிங்கர், தாரமங்கலம், கூடலூர், காரமடை, வடலூர், திருக்கோயிலூர், உளுந்தூர்ப்பேட்டை, சுரண்டை, களக்காடு, அதிராம்பட்டினம், மானாமதுரை,முசிறி, கருமத்தம்பட்டி, மதுக்கரை, லால்குடி, கொல்லன்கோடு ஆகியவை நகராட்சிகளாக மாற்றப்படுவதுடன், புகளூர் மற்றும் டிஎன்பிஎல் புகளூரை இணைத்து புகளூர் நகராட்சியும் உருவாக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Anbu -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-202118:34:10 IST Report Abuse
Bala Anbu Please don't repeat the same comment
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-ஆக-202118:20:26 IST Report Abuse
spr மறைமுகமாக சொத்து வரியை உயர்த்த இது ஒரு வழியோ மாநகராட்சி என்று பதவி உயர்வு பெற அங்கே என்ன வசதியிருக்கிறது? இனி புழல் பொன்னேரி இவை கூட மா நகராட்சி (பெரிய நகராத ஆட்சி) ஆகிவிடுமோ? பாதாள சாக்கடைகள் மழை நீர் வடிகால் என அனைத்து வசதிகளிருந்தும் சென்னைப் பெருநகரமே மழை வந்தால் மிதக்கிறது அந்த வகையில் இந்தப் பகுதிகள் இயல்பாக மழையில் மிதக்கும் நிலைமை . ஒன்றுதான் தாம்பரம் நகராட்சி ஆக அதற்குள்ள ஒரே தகுதி
Rate this:
Cancel
KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா
24-ஆக-202117:56:22 IST Report Abuse
KALPATHY VASUDEVA IYER NARAYANAN மிகவும் நல்லது. ஆலந்தூர் நகராட்சி Greater Chennaiyil இண்க்கபெட்டு. பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தேற்பொதும் காஞசிபுரm மாவட்டத்தில்தான் இருக்கிறது. பண பட்டுவாடா சைவதேர்க்கு மட்டும் சென்னையில் இருக்கிறது. ஆகாயல் ஆலந்தூர் Greater Cheenai yil இணக்க தயவுசெய்து வேண்டிய நடவடி்கைகள் எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X