சென்னை : 'தமிழக மீனவர்கள் மீதான, இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என,த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
கச்சத்தீவு அருகே, 556 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. தொடர் தாக்குதலால், 60க்கும் மேற்பட்ட படகுகளும், 25க்கும் மேற்பட்ட வலைகளும் சேதம் அடைந்துள்ளன. அதில், ஆறு மீனவர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும். மத்திய அரசுஉடனே வெளியுறவுத்துறை வாயிலாக, இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.
வாசனின் மற்றொரு அறிக்கையில், 'கொரோனா பாதிப்பை கவனத்தில்கொண்டு, சுங்கச்சாவடிகளில், கட்டணம் உயராமல் இருக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE