ஆர்வக்கோளாறு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஆர்வக்கோளாறு

Added : ஆக 24, 2021
Share
ஆர்வக்கோளாறு! 'கிடைத்த பதவியை அனுபவிக்காமல் கோட்டை விட்டு விடுவார் போலிருக்கிறதே' என, நேற்று கைதாகி உள்ள மத்திய குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானேயை கிண்டலடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.நாராயண் ரானே, மஹாராஷ்டிராவில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள அரசியல்வாதி. சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இவருக்கு, ஒரு ஆண்டுக்கு

அக்கம் பக்கம்


ஆர்வக்கோளாறு!



'கிடைத்த பதவியை அனுபவிக்காமல் கோட்டை விட்டு விடுவார் போலிருக்கிறதே' என, நேற்று கைதாகி உள்ள மத்திய குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானேயை கிண்டலடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.நாராயண் ரானே, மஹாராஷ்டிராவில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள அரசியல்வாதி. சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த இவருக்கு, ஒரு ஆண்டுக்கு முதல்வர் பதவியை வகிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பின், காங்கிரசில் இணைந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் பா.ஜ.,வில் சேர்ந்தார். சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, நாராயண் ரானேக்கு பதவி கிடைத்தது. மகிழ்ச்சியில் அவருக்கு தலைகால் புரியவில்லை.சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவுக்கு சென்ற அவர், அங்குள்ள, 'டிவி' சேனல்களுக்கு, தன் அருமை, பெருமைகளை எல்லாம் விளக்கி பேட்டி கொடுத்தார். பா.ஜ., மேலிடத்துக்கு வேண்டாத, 'டிவி' சேனலுக்கும் அவர் பேட்டி கொடுத்திருந்தார். இதையறிந்த பிரதமர் மோடி, 'அமைச்சர்களில் சிலர், 'டிவி' சேனல்களுக்கு பேட்டி அளித்து, தங்களை ஹீரோக்களாக காட்ட முயற்சிக்கின்றனர்' என, மறைமுகமாக குறிப்பிட்டார். நாராயண் ரானேக்கு வியர்த்து விட்டது. 'ஆர்வக்கோளாறில் அதிகம் உளறிக் கொட்டி விட்டோமோ' என, பீதியில் உறைந்துள்ளார். இப்போது மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை அறையப் போவதாகவும் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 'எப்போது வேண்டுமானாலும், ரானேயிடம் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம்' என, வதந்தி பரவுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X