சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில், சமூகத்திற்காகவும், கட்சிக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பவர்களை எல்லாம், பல துறைகளில் அடையாளம் கண்டு பதவி கொடுத்து, மரியாதை செய்யும் ஒரே கட்சி பா.ஜ., தான். தொடர்ந்து, தமிழர்களை சிறப்பான பதவிகளில் நியமித்ததன் வாயிலாக, தமிழகத்திற்கு தான் வழங்கும் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும், பிரதமர் மோடி நிரூபித்துக் கொண்டு


'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில், சமூகத்திற்காகவும், கட்சிக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பவர்களை எல்லாம், பல துறைகளில் அடையாளம் கண்டு பதவி கொடுத்து, மரியாதை செய்யும் ஒரே கட்சி பா.ஜ., தான். தொடர்ந்து, தமிழர்களை சிறப்பான பதவிகளில் நியமித்ததன் வாயிலாக, தமிழகத்திற்கு தான் வழங்கும் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும், பிரதமர் மோடி நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.

'டவுட்' தனபாலு: உண்மை தான். தமிழகம் மீது, பிரதமர் மோடிக்கு அசைக்க முடியாத நல்ல எண்ணம், நம்பிக்கை உள்ளது. அதன் ஒரு அங்கம் தான், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவிகள் என்பதிலும், 'டவுட்'டே யாருக்கும் வராது. எப்படியோ, மோடி கொடுத்த பதவியை நம்மவர்கள், மாநில நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.


த.மா.கா., தலைவர் வாசன்:
கச்சத்தீவு அருகே, 556 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. தொடர் தாக்குதலால் 60க்கும் மேற்பட்ட படகுகளும் 25க்கும் மேற்பட்ட வலைகளும் சேதம் அடைந்துள்ளன. அதில், ஆறு மீனவர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.

'டவுட்' தனபாலு: இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது என்பதால் தான், இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், இரு நாடுகளும் தீர்க்க விரும்பாமல், அப்படியே கிடப்பில் போட்டுள்ளனவோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய பிரச்னை என்னவென்றால், நம் மீனவர்கள் பயன்படுத்தும் வலை தான். எனினும், கச்சத்தீவை மீட்டாலும் இந்த பிரச்னை தீரப் போவதில்லை என்பது மட்டும் உறுதி!


தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்:
தமிழகத்தில் உள்ள 1,112 தியேட்டர்களும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு இயங்க உள்ளன. தியேட்டர் பணியாளர்களில், 90 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தி விட்டோம். இருக்கையில் சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் தெளிப்பு உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்பட்டு, ரசிகர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவோம்.

'டவுட்' தனபாலு: ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால், தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. எனவே, இதை பாடமாக கொண்டு, தியேட்டர்களில் கொள்ளை லாபம் அடிப்பதை, தியேட்டர் நடத்துபவர்கள் இனிமேலாவது பின்பற்றுவர் என்பதில், 'டவுட்' இல்லை!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஆக-202115:35:48 IST Report Abuse
D.Ambujavalli அது எப்படி நடக்கும் ? வரப்போவதே பாதி எண்ணிக்கை ரசிகர்கள் தான் எனவே அவர்களிடம் இரு மடங்கு கறந்துவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X