பொது செய்தி

இந்தியா

மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புது டில்லி: ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான பாரதிய விவசாயிகள் சங்கம், விவசாய சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக தாங்கள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்., 8 முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளது.மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு பஞ்சாப், அரியானா, உ.பி., மாநிலங்களில் கடும்

புது டில்லி: ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான பாரதிய விவசாயிகள் சங்கம், விவசாய சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக தாங்கள் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்., 8 முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளது.



latest tamil news




மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு பஞ்சாப், அரியானா, உ.பி., மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. குடியரசு தினத்தன்று செங்கோட்டையை கைப்பற்றி கலவரத்திலும் ஈடுபட்டனர். ஏப்ரல் முதல் கொரோனா 2-ம் அலையால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டதால் விவசாய சங்கங்களின் போராட்டங்கள் ஓய்ந்தன. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், எதிர்ப்பாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னரும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.


latest tamil news



இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்., உறுப்பு அமைப்பான பாரதிய விவசாயிகள் சங்க பொருளாளர் யுகல் கிஷோர் மிஸ்ரா கூறியதாவது: குறைந்தபட்ச ஆதரவு விலையை செலவின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும். புதிய விவசாயச் சட்டங்களால் எழும் சர்ச்சையைத் தீர்க்க, விவசாயிகளின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்காக, செப்டம்பர் 8 அன்று நாடு தழுவிய அடையாள போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகும் எங்கள் கோரிக்கைகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். மோடி அரசை ஆர்.எஸ்.எஸ்., நடத்தவில்லை. அப்படியிருந்தால் எங்கள் அமைப்பு போராட்டத்தை நாட வேண்டிய தேவையில்லை. விவசாயிகளின் நலன் சார்ந்த பிரச்சினைகளில் எந்த அரசாங்கமும் தீவிரமாக இல்லை. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-ஆக-202113:53:20 IST Report Abuse
S.Baliah Seer என் சொந்தக்காரர்கள் சிலர் RSS- -இயக்கத்தில் சேர்ந்து மெண்டல் ஆனதுதான் மிச்சம்.நான் அவர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் ஆன்லைன் வழியாக.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
25-ஆக-202109:44:37 IST Report Abuse
pradeesh parthasarathy போராடும் விவசாயிகளுக்கு இடையி பிரிவினையை உருவாகும் பிஜேபியின் முயற்சி ...
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
25-ஆக-202109:07:51 IST Report Abuse
Sivagiri வேறு எந்த போராட்டங்களும் டில்லியில் நுழைய விடாத வகையில் , திட்டமிட்டு ரகசிய ஒப்பந்த அடிப்படையில் நடத்தப படும் போராட்டம் போல இருக்கே . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X