சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தினமும் ஸ்டேஷன் வரும் தலைமறைவு குற்றவாளி!

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தினமும் ஸ்டேஷன் வரும் தலைமறைவு குற்றவாளி!''லஞ்சம் வாங்குனது உறுதியானதால தான், அடுத்தடுத்து மாத்திட்டாங்கன்னு சொல்றாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.''யாரை, எங்கவே மாத்துனா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யா இருந்தவர் தேஷ்முக் சேகர் சஞ்சய்... இவரை, ரெண்டு வாரத்துக்கு முன்ன, ராணிப்பேட்டை எஸ்.பி.,யா மாத்துனாங்க பா...

டீ கடை பெஞ்ச்


தினமும் ஸ்டேஷன் வரும் தலைமறைவு குற்றவாளி!


''லஞ்சம் வாங்குனது உறுதியானதால தான், அடுத்தடுத்து மாத்திட்டாங்கன்னு சொல்றாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''யாரை, எங்கவே மாத்துனா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தஞ்சை மாவட்ட எஸ்.பி.,யா இருந்தவர் தேஷ்முக் சேகர் சஞ்சய்... இவரை, ரெண்டு வாரத்துக்கு முன்ன, ராணிப்பேட்டை எஸ்.பி.,யா மாத்துனாங்க பா...

''கும்பகோணத்துல பைனான்ஸ் நிறுவனம் நடத்தி, மோசடியில ஈடுபட்ட சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதனை கைது பண்ணி ஜெயில்ல போட்டிருக்காங்களே... இவங்க மேல ஏற்கனவே பண மோசடி புகார்கள் நிறைய வந்திருக்குது பா...

''அதுல நடவடிக்கை எடுக்காம இருக்க, எஸ்.பி.,க்கும், சில போலீஸ் அதிகாரிகளுக்கும் லட்சக்கணக்குல லஞ்சம் கொடுத்ததா, போலீஸ் விசாரணையில சகோதரர்கள் சொல்லிட்டாங்க... அதே நேரம், எஸ்.பி., லஞ்சம் வாங்குனதுக்கு ஆதாரம் இல்லையாம்...

''அதனால தான், அவரை முதல்ல ராணிப்பேட்டைக்கு மாத்தி, அடுத்த 15 நாள்லயே, மதுரை பட்டாலியன் கமாண்டன்டா துாக்கி அடிச்சிட்டாங்கன்னு, போலீஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''என்கிட்டயும் ஒரு போலீஸ் தகவல் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகாவுல, 100க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், டிராக்டர்கள்ல கற்களை கடத்திண்டு இருக்கா... கல் குவாரிகள்ல வேஸ்டாகற கற்கள், அரசு புறம்போக்கு நிலத்துல பாறையா இருக்கற கற்களை எல்லாம் வெட்டி, கடத்திண்டு இருக்கா ஓய்...

''தி.மு.க., ஆட்சி வந்ததும், கல், மண் கடத்தலுக்கு எஸ்.பி., ஸ்ரீஅபினவ் தடை விதிச்சார்... ஆனா, கடத்தல் கும்பல், ஒரு டி.எஸ்.பி.,யை பார்த்து, 'கடத்தலை கண்டுக்காம இருக்க இவ்வளவு தந்துடறோம்'னு சொல்லி, ஒரு தொகையை சொல்லியிருக்கு ஓய்...

''அந்தத் தொகையைக் கேட்டு, டி.எஸ்.பி., மலைச்சு போயிட்டார்... அதனால, 'உயர் அதிகாரிகளிடம் பேசிட்டு சொல்றேன்'னு வாய்தா கேட்டிருக்காராம்... 'பாசிட்டிவ்'வான பதில் வரும்னு கடத்தல் கும்பல் காத்துண்டு இருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''நல்லசிவம் தம்பியை ரொம்ப நாளா பார்க்க முடியலையே... வெளியூர் போயிருந்தீயளா...'' என, எதிரில் வந்த நண்பரிடம் நலம் விசாரித்த அண்ணாச்சி, ''தலைமறைவு குற்றவாளி தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துட்டு போற கதை தெரியுமா வே...'' எனக் கேட்டு நிறுத்தினார்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''திருச்சி மாவட்டம், துறையூர் ஸ்டேஷன்ல போலீசா இருக்கிறவங்க லீலாவதி... இவங்க வீட்டுக்காரர் நல்லமுத்து, டிப்பர் லாரியில மணல் கடத்திட்டு இருந்தாரு வே...

''போன மாசம் 22ம் தேதி, இவரது லாரியை போலீசார் பிடிச்சிட்டாவ... நல்லமுத்துவை வழக்குல இருந்து காப்பாற்ற, லீலாவதி முயற்சி எடுத்தும் முடியலை வே... இதனால, நல்லமுத்து கைதாகாம தலைமறைவு ஆயிட்டாரு...

''அவர் மேல ஏற்கனவே ஏழு மணல் கடத்தல் வழக்கு இருக்கு... குண்டர் சட்டத்துலயும் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்காரு வே...

''போலீசாரால தேடப்படும் நல்லமுத்து, தினமும் தன் வீட்டம்மாவை, பைக்ல ஸ்டேஷனுக்கு வந்து விட்டுட்டு போறாரு... அவரை பிடிக்க போலீசார் எந்த முயற்சியும் எடுக்க மாட்டேங்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.பெரியவர்கள் பேச்சு, வேறு பக்கம் திரும்பியது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஆக-202115:43:05 IST Report Abuse
D.Ambujavalli போலீஸ் மனைவியாக இருக்கையில் யார் அவரை டச் பண்ணுவார்கள்? ஸ்டேஷன் போலீஸ் அவருக்கும் சேர்த்து சல்யூட் அடித்து மரியாதை செய்யும் கேஸ் வேற, பதவி வேற 😄
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
25-ஆக-202104:13:39 IST Report Abuse
John Miller பாஜக செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணனுக்கு இரண்டு நாட்களாக குளிர்ச்சிதரும் அடிக்கின்றது ஆமே?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
25-ஆக-202102:15:49 IST Report Abuse
BASKAR TETCHANA இன்றைய டீக்கடை பென்ச் கட்டுரையில் எல்லாமே போலீஸ் செய்திகளாக வந்து இருக்கிறதே. இதெல்லாம் நம்ம டி.ஜி.பி.க்கு தெரியுமா. இல்லை தெரிந்தும் பேசாமல் இருக்கிறாரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X