இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 24, 2021
Share
ஆக., 25, 1906தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 1906 ஆக., 25ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜி.கிட்டப்பா. இயற்பெயர், ராமகிருஷ்ணன். வறுமை காரணமாக, தன் 5வது வயதிலேயே, 'நல்லதங்காள்' நாடகத்தில் நடித்தார். சிறந்த குரல்வளமும், இசை அறிவும் உடைய கிட்டப்பா, நாடகங்களில் ஜொலித்தார்.'வள்ளி திருமணம், நந்தனார், கோவலன், ஞானசவுந்தரி' உள்ளிட்ட நாடகங்களில் இணைந்து நடித்த கே.பி.சுந்தராம்பாளை


இதே நாளில் அன்று


ஆக., 25, 1906



தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 1906 ஆக., 25ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜி.கிட்டப்பா. இயற்பெயர், ராமகிருஷ்ணன். வறுமை காரணமாக, தன் 5வது வயதிலேயே,
'நல்லதங்காள்' நாடகத்தில் நடித்தார். சிறந்த குரல்வளமும், இசை அறிவும் உடைய கிட்டப்பா, நாடகங்களில் ஜொலித்தார்.'வள்ளி திருமணம், நந்தனார், கோவலன், ஞானசவுந்தரி' உள்ளிட்ட நாடகங்களில் இணைந்து நடித்த கே.பி.சுந்தராம்பாளை காதலித்து, திருமணம் முடித்தார். இருவரும் இணைந்து, 'ஸ்ரீகானசபா' என்ற நாடகக் கம்பெனியை துவக்கினர்.மேடையில் கர்னாடக இசையை அறிமுகப்படுத்திய பெருமை, கிட்டப்பாவையே சேரும். இவர் பாடி, 'வள்ளி திருமணம்' நாடகத்தில் இடம்பெற்ற, 'காயாத கானகத்தே...' பாடல் வெகு பிரபலம். கிட்டப்பா நாடகங்களில் நடித்து, சுதந்திர போராட்டத்திற்கு நிதி திரட்டி கொடுத்தார். 1933 டிச.,
2ம் தேதி தன் 27வது வயதில் காலமானார்.எஸ்.ஜி.கிட்டப்பா பிறந்த தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X