'குரு கிரந்தம்' புனித நூல் பிரதியுடன் ஆப்கனில் இருந்து வந்த சீக்கியர்கள்

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:ஆப்கனில் இருந்து புனித 'குரு கிரந்தம்' மத நுாலின் மூன்று பிரதிகளுடன் சீக்கியர்கள் 44 பேர் உட்பட 122 பேர் டில்லி வந்தனர். மத்திய அரசு 'தேவி சக்தி' என்ற திட்டத்தின் கீழ் ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்டோரை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த பணியில் அமெரிக்காவில் உள்ள சோப்தி அறக்கட்டளை இணைந்து மத்திய அரசின்
 'குரு கிரந்தம்'  புனித நூல் பிரதியுடன் ஆப்கனில் இருந்து வந்த சீக்கியர்கள்

புதுடில்லி:ஆப்கனில் இருந்து புனித 'குரு கிரந்தம்' மத நுாலின் மூன்று பிரதிகளுடன் சீக்கியர்கள் 44 பேர் உட்பட 122 பேர் டில்லி வந்தனர்.

மத்திய அரசு 'தேவி சக்தி' என்ற திட்டத்தின் கீழ் ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்டோரை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த பணியில் அமெரிக்காவில் உள்ள சோப்தி அறக்கட்டளை இணைந்து மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் ஆப்கனைச் சேர்ந்த சீக்கியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர உதவி வருகிறது.

இந்நிலையில் ஆப்கனில் வசித்த சீக்கியர்கள் 44 பேர் உட்பட 122 பேர் காபூலில் இருந்து தஜிகிஸ்தான் வழியாக சிறப்பு விமானத்தில் நேற்று டில்லி வந்தனர். அவர்களை டில்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் ஹர்திப் சிங் பூரி, முரளிதரன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது சீக்கியர்கள் ஆப்கனில் இருந்து எடுத்து வந்த 'குருகிரந்தம்' எனப்படும் சீக்கிய மத நுாலின் மூன்று பிரதிகளை அமைச்சர்களிடம் வழங்கினர்.

இதையடுத்து குருகிரந்தப் பிரதிகள் டில்லியில் உள்ள குரு அர்ஜுன் தேவ்ஜி குருத்வாராவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தலிபானிடம் ஆப்கன் வீழ்ந்த பின், ஆக., 16 - 23ம் தேதி வரை அங்கிருந்து 730 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 'கெடு'வுக்குள் முடிக்க திட்டம்ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவம் 31ம் தேதிக்குள் முழுமையாக வெளியேற உள்ளது. அதற்குள் ஆப்கனில் சிக்கியுள்ள அமெரிக்கர்களையும், அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கன் மக்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரையும் அழைத்து வர, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. விமானங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கானோர் தினமும் ஆப்கனில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஜூலை இறுதியில் இருந்து தற்போது வரை 42 ஆயிரம் பேர் ஆப்கனில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 37 ஆயிரம் பேர் ஆப்கனில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுஉள்ளனர். இப்பணியில் 5.000க்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கான கெடு முடிய சில தினங்களே உள்ளன. அதற்குள், அனைவரையும் வெளியேற்ற அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.'அவ்வாறு முடியாத பட்சத்தில் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்வார்' என, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
25-ஆக-202104:28:09 IST Report Abuse
Milirvan பக்கி'ஸ்தானை ஆதரிக்கும் ஒரு பிரிவு சீக்கியர்கள் இவர்களை பக்கி'ஸ்தானின் மேற்கு பஞ்சாப் & சிந்து'விற்கு அழைப்பார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X