பொது செய்தி

இந்தியா

ஈர்ப்பான உற்பத்தி மையம்: அமெரிக்காவை விஞ்சிய இந்தியா

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (6+ 3)
Share
Advertisement
புதுடில்லி ;உலகளவில், 'மிகவும் ஈர்ப்பான உற்பத்தி மையங்கள்' பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.முதலிடத்தில் சீனா உள்ளது.இதற்கு முக்கியமான காரணம், உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருப்பது தான் என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, 'குஷ்மேன் அண்டு வேக்பீல்டு' நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து மேலும்
ஈர்ப்பான உற்பத்தி மையம், அமெரிக்கா, இந்தியா

புதுடில்லி ;உலகளவில், 'மிகவும் ஈர்ப்பான உற்பத்தி மையங்கள்' பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

முதலிடத்தில் சீனா உள்ளது.இதற்கு முக்கியமான காரணம், உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருப்பது தான் என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, 'குஷ்மேன் அண்டு வேக்பீல்டு' நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா பசிபிக் ஆகியவற்றில் உள்ள 47 நாடுகளில், சீனா முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள அமெரிக்காவை அடுத்து, பட்டியலில் கனடா, செக் குடியரசு, இந்தோனேஷியா, லித்துவேனியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.கடந்த ஆண்டின் போது, அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் நான்கு முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.மீண்டும் விரைவாக உற்பத்தியை துவக்குதல், வணிக சூழல், உற்பத்தி செலவுகள், இடர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (6+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஆக-202123:21:18 IST Report Abuse
தமிழவேல் கொரோனாவிற்குப்பின், பல நாடுகளுக்கு, 1 தனது பொருட்களுக்கு ஒரு நாட்டைமட்டும் சார்த்திருக்கப் பிடிக்கவில்லை. அதுவும் சீனாவைப் பிடிக்கவில்லை. 2 முக்கிய அத்தியாவசிய பொருட்களை (ex: paracétamol) தனது நாட்டில் அல்லது மேலும் ஒரு மலிவு நாட்டில் உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-ஆக-202114:35:00 IST Report Abuse
அசோக்ராஜ் அப்படியா? இந்தியா அவ்வளோ வளர்ந்திடுச்சா? நம்ம பார்வைக்கு ஒண்ணுமே தெர்லயே? இருக்கற ஆலைகளையும் மூடிக்கிட்டுத் தானே இருக்காங்க? ஓஹோ... புரியுது. இந்திய ஒன்றியம் வளர்ந்திடுச்சு. தமிழக ஊராட்சி பின் தங்கிடுச்சு. பட், எங்களுக்கு வளர்ச்சியா முக்கியம்? அனைத்து சாதியினரையும் மாப்பிள்ளை ஆக்கணும். பட்டிவீரன்பட்டியை மாநகராட்சி ஆக்கணும். ரெண்டாயிரத்து ஐங்ஙூரு கோடியில் உல்லாசப் பூங்காக்கள் ஏற்படுத்தணும். நுப்பத்து ஒம்போது கோடியில் கலைஞருக்கு நினைவிடம் கட்டணும். கோவில் சொத்துக்களை வளைக்கணும். லவ் ஜிஹாத் பண்றவனுக்கு பணமுடிப்பு வழங்கணும். மதுபான வியாபாரத்தைப் பெருக்கணும். மாசம் பத்தாயிரம் கோடி கடன் வாங்கணும். அப்பப்பா ... சமூகநீதியை இப்படியெல்லாம் நிலைநாட்டுறது முக்கியமா? பொருளாதார வளர்ச்சி முக்கியமா? ஆபிரகாமிய தமிளகம் வால்க. திராவிசம் வெல்க.
Rate this:
Cancel
guru - thiruvallore,ஆஸ்திரேலியா
25-ஆக-202113:20:34 IST Report Abuse
guru "மிகவும் ஈர்ப்பான உற்பத்தி மையங்கள்" ன்ன ஏன்னதுனு புரியல்ல......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X