சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஆக 24, 2021
Share
Advertisement
3 பயங்கரவாதிகள் பலிஸ்ரீநகர்: ஜம்மு -- காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையை துவங்கினர். நேற்று அதிகாலை பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு நம் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த 'என்கவுன்டரில்' மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜன., முதல் காஷ்மீர்

3 பயங்கரவாதிகள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு -- காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையை துவங்கினர். நேற்று அதிகாலை பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு நம் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த 'என்கவுன்டரில்' மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜன., முதல் காஷ்மீர் மண்டலத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளதாக போலீஸ் ஐ.ஜி., விஜய்குமார் தெரிவித்து உள்ளார்.

கமிஷனர் வீட்டில் கொள்ளை

நாக்பூர்: மஹாராஷ்டிராவின் நாக்பூர் வருமான வரி கமிஷனர் ராஜேஷ் ரஞ்சன் தினநாத் பிரசாத். வருமான வரி அதிகாரிகளுக்கான குடியிருப்பில் வசிக்கும் இவர், சமீபத்தில் உறவினரைச் சந்திக்க மும்பை சென்றார். நேற்று முன்தினம் அவர் திரும்பி வந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 2.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், நகைகளை கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

நக்சலைட்டுகள் கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் கோம்பாட் அருகே உள்ள வனப்பகுதியில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் இரு நக்சல்கள் கொல்லப்பட்டனர்; ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. காயமடைந்த சில நக்சல்களை அவர்களின் நண்பர்கள் வனப்பகுதிக்குள் துாக்கிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளச்சாராயம்: மூவர் பலி

ஆக்ரா: உத்தர பிரதேசத்தின் ஆக்ரா அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த நான்கு பேர், அங்குள்ள கடையில் மது குடித்தனர். இதில் மூவர் பலியாயினர்; ஒருவர் சிகிச்சையில் உள்ளார். கடையில் விற்ற கள்ளச்சாராயத்தால் அவர்கள் பலியானதாக கிராம மக்கள் கூறினர். இதனால் அங்குள்ள நான்கு மதுக் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

ஆயுத வியாபாரி சுட்டுக்கொலை

கரிம்கஞ்ச்: வடகிழக்கு மாநிலமான அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டம் பதர்பூரில், நுாருல் இஸ்லாம் என்பவர் சட்ட விரோதமாக ஆயுத விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், அவரது நண்பரை தேடும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது தப்பிச் செல்ல முயன்ற நுாருல் இஸ்லாம், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X