வெளிநாட்டில் உயிரிழந்த இந்தியர்கள் இழப்பீடு கோரிய வழக்கில் உத்தரவு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா பெருந்தொற்றால் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய குடிமக்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய பொதுநல மனுவை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.'கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு அளிப்பதை போல, வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய குடிமக்களின் குடும்பத்தினருக்கும்

புதுடில்லி:கொரோனா பெருந்தொற்றால் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய குடிமக்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய பொதுநல மனுவை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

'கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு அளிப்பதை போல, வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய குடிமக்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்' என, வழக்கறிஞர் எம்.பி.ஸ்ரீவிக்னேஷ் டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் விபரங்களை துாதரகங்கள் வாயிலாக திரட்டவும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளை இந்த பட்டியலில் சேர்க்கவும், நீதிமன்றம் உத்தரவிடும் படி மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனு டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அரசின் கொள்கைக்கு உட்பட்டு இந்த மனு மீது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய வெளியுறவுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை விரைவில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X