எம்.பி., மீது புகார் செய்து தீக்குளித்த பெண் மரணம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:உச்ச நீதிமன்றம் அருகே தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.உத்தர பிரதேச மாநிலம் காசிப்பூர் நகரை சேர்ந்தவர் ஒரு ஆண் மற்றும் 34 வயது இளம்பெண் ஆகியோர் சமீபத்தில் டில்லி வந்தனர். உச்ச நீதிமன்றம் அருகே இருவரும் தீக்குளித்தனர். இருவரும் மீட்கப்பட்டு, டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சமீபத்தில் அந்த ஆண்
 எம்.பி., மீது புகார் செய்து தீக்குளித்த பெண் மரணம்

புதுடில்லி:உச்ச நீதிமன்றம் அருகே தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் காசிப்பூர் நகரை சேர்ந்தவர் ஒரு ஆண் மற்றும் 34 வயது இளம்பெண் ஆகியோர் சமீபத்தில் டில்லி வந்தனர். உச்ச நீதிமன்றம் அருகே இருவரும் தீக்குளித்தனர். இருவரும் மீட்கப்பட்டு, டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சமீபத்தில் அந்த ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளம்பெண்ணும் உயிரிழந்தார்.இந்தப் பெண் தீக்குளிப்பதற்கு முன் வெளியிட்டுள்ள 'வீடியோ'வில் கூறியிருந்ததாவது:பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்.பி., அதுல் ராய் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கில் அவர் இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் அதுல் ராய்க்கு ஆதரவாக இருக்கின்றனர். நான் போலியான வயதுச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக என் மீது ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், விசாரணை நியாயமான முறையில் நடக்கவும், இந்த வழக்கு விசாரணையை டில்லிக்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X