பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.5,000 கோடி கடன் கூட்டுறவு துறை எதிர்பார்ப்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை:விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க, 'நபார்டு' வங்கியிடம் இருந்து, கூட்டுறவு வங்கிகள் 5,000 கோடி ரூபாய் கடனை எதிர்பார்க்கின்றன.தமிழக அரசின், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர் கடன், நகைக் கடன், சிறு வணிக கடன் போன்ற பிரிவுகளில் கடன் வழங்குகின்றன. அவற்றுக்கு

சென்னை:விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க, 'நபார்டு' வங்கியிடம் இருந்து, கூட்டுறவு வங்கிகள் 5,000 கோடி ரூபாய் கடனை எதிர்பார்க்கின்றன.

தமிழக அரசின், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர் கடன், நகைக் கடன், சிறு வணிக கடன் போன்ற பிரிவுகளில் கடன் வழங்குகின்றன.

அவற்றுக்கு தேவையான நிதி ஆதாரத்தை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்து, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகின்றன.

சென்னை தவிர்த்த மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர் கடன் வழங்கப்படுகிறது. குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துவோருக்கான வட்டியை, தமிழக அரசே ஏற்கிறது.நடப்பு நிதியாண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, நபார்டு வங்கியிடம் இருந்து, 5,000 கோடி ரூபாய் கடனை, கூட்டுறவு வங்கிகள் எதிர்பார்க்கின்றன. விரைவில், அந்த கடன் தொகை வழங்கப்படும் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X