அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு நினைவிடம்: ஸ்டாலின் அறிவிப்புக்கு ஓ.பி.எஸ்., வரவேற்பு

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (38+ 118)
Share
Advertisement
சென்னை: ''சென்னையில், அண்ணா நினைவிட வளாகத்தில், 39 கோடி ரூபாய் மதிப்பில், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்,'' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:முதல் அறிவிப்பே, 80 ஆண்டு கால தமிழ் சமுாயத்துக்கு உழைத்த போராளி, கருணாநிதியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பாக அமைந்துள்ளதை நினைத்து, இந்த
கருணாநிதி, நினைவிடம்,  ஸ்டாலின், அறிவிப்பு, ஓ.பி.எஸ்., வரவேற்பு,

சென்னை: ''சென்னையில், அண்ணா நினைவிட வளாகத்தில், 39 கோடி ரூபாய் மதிப்பில், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்,'' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டசபையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:முதல் அறிவிப்பே, 80 ஆண்டு கால தமிழ் சமுாயத்துக்கு உழைத்த போராளி, கருணாநிதியின் புகழுக்கு பெருமை சேர்க்கும் அறிவிப்பாக அமைந்துள்ளதை நினைத்து, இந்த அரசே பெருமைப்படுகிறது.வரலாறாக வாழ்ந்தவர் உலகெங்கிலும் தமிழர்களுக்கு எல்லாம் தமிழினதலைவர். இலக்கிய துறையை சார்ந்தவர்களுக்கு எல்லாம், முத்தமிழ் அறிஞர். கலையுலகத்தினருக்கு என்றும் கலைஞர்.

இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி. இந்த அவைக்கு என்றும் நிரந்தர உறுப்பினர்.அவர், 80 ஆண்டு பொது வாழ்க்கை; 70 ஆண்டு திரைத்துறை; 70 ஆண்டு பத்திரிகையாளர்; 60 ஆண்டு எம்.எல்.ஏ., - 50 ஆண்டு தி.மு.க., தலைவர் என, வாழ்ந்த காலம் முழுதும், வரலாறாக வாழ்ந்தவர் கருணாநிதி. 13 முறை வெற்றிநின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர்,அவராக மட்டும் தான் இருக்க முடியும்.

குளித்தலையில் போட்டியிட்டு, 13 சட்டசபை தேர்தல்களிலும் குனியாத தலை.மொத்தம், 13 முறை சட்டசபைக்கு போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி வாகை சூடியவர். ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார்.தமிழ் மொழியின் மேன்மைக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய மக்களின் கல்வி, அறிவியல், சமூகப் பொருளாதார அரசியல் எழுச்சிக்கும் வழிவகுக்கும் மகத்தான திட்டங்களையும், சட்டங்களையும் உருவாக்கி, தமிழகத்தை வளர்ச்சி பெற்ற முன்னணி மாநிலமாக்கியதில், கருணாநிதி பங்கு ஈடு இணையற்றது.

அரை நுாற்றாண்டு காலத்தின், நிரந்தர தலைப்பு செய்தியாக இருந்த கருணாநிதி, 2018 ஆக.,7ல் நிரந்தர ஓய்வுக்கு சென்று விட்டார்.அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை, மக்களும், வருங்கால தலைமுறையும் அறியக்கூடிய வகையில், நவீன விளக்கப் படங்களுடன், சென்னை, காமராஜர் சாலை, அண்ணாதுரை நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பில், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.


அ.தி.மு.க., வரவேற்பு

கருணாநிதிக்கு நினைவிடம் கட்டும் அறிவிப்பை வரவேற்று, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பேசியதாவது: கருணாநிதிக்கு மணிமண்டபம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை, முதல்வர் அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்கிறோம்.

முதல்வர் பேசுகையில், கருணாநிதி சிறப்புகளை கோர்வையாக எடுத்துரைத்தார். அவை என்றென்றும் வரலாற்றில் இடம் பெறும் வகையில், அங்கு இடம் பெற வேண்டும். முதல்வரின் உரையில், கருணாநிதி வசனத்தில் அனல் பறக்கும் என்று கூறினார். அது பின்னடைவில் இருக்கிற சமுதாயத்தை, சீர்திருத்தும் கருத்துக்களாக இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டு பராசக்தி, மனோகரா வசனம். என் தந்தை, கருணாநிதியின் தீவிர பக்தர். அவர் பராசக்தி, மனோகரா கதை வசனப்புத்தகத்தை வைத்து, எங்களை படிக்க சொல்வார்.

இதை பல நேரங்களில், என் நண்பர்களிடம் கூறியுள்ளேன். இதை முழு மனதாக வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.அதேபோல, சட்டசபை பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட, சட்டசபை கட்சி தலைவர்கள் அனைவரும் வரவேற்று பேசினர்.

Advertisement
வாசகர் கருத்து (38+ 118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏகன் ஆதன் - கிண்ணிமங்கலம்,இந்தியா
27-ஆக-202103:04:47 IST Report Abuse
ஏகன் ஆதன் எழுதுங்கள் அவர் கல்லறையில் , இலவச டிவி என்று மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கையூட்டு கொடுத்த கோமான் என்று
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஆக-202123:32:35 IST Report Abuse
தமிழவேல் அரசு செலவில் செய்யாமல், இவர்கள் செலவில் செய் யவேண்டியதுதானே ? அங்கே உள்ள சமாதிகளுக்கு இட வாடகை வசூலித்து கஜானாவில் சேர்க்கவேண்டும்.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-202122:32:36 IST Report Abuse
Sriram V Jyothika why you are not saying anything? You tell them that they can construct hospital or schools in this money
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X