உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் ரூ.2,578 கோடி கிடைக்கும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் ரூ.2,578 கோடி கிடைக்கும்'

Added : ஆக 24, 2021
Share
அ.தி.மு.க., - வேலுமணி: உள்ளாட்சி துறை, இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டும் ஒன்றாக இருப்பது நல்லது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகியவற்றுக்கு, நிதி குறைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில், அதிக நிதி ஒதுக்க வேண்டும்.நிதி ஒதுக்கவில்லைகடந்த 2013ல், 'அம்மா உணவகம்' துவக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில், 407 இடங்களிலும், பிற

அ.தி.மு.க., - வேலுமணி: உள்ளாட்சி துறை, இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டும் ஒன்றாக இருப்பது நல்லது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகியவற்றுக்கு, நிதி குறைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில், அதிக நிதி ஒதுக்க வேண்டும்.


நிதி ஒதுக்கவில்லை

கடந்த 2013ல், 'அம்மா உணவகம்' துவக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில், 407 இடங்களிலும், பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 207 இடங்களிலும், ஊரகப்பகுதிகளில் நான்கு இடங்களிலும் செயல்படுகிறது.இந்த திட்டத்திற்கு 2020 - 21ம் ஆண்டு பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, நிதி எதுவும் ஒதுக்காமல் உள்ளது. மேலும், '2020 - 21ம் ஆண்டில், பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தில், தமிழகத்தில், புதிதாக வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என பட்ஜெட்டில் தெரிவித்து உள்ளீர்கள்.

கடந்த 2016 - 17 முதல் 2019 - 20 வரை, கட்டுமானத்திற்கு எடுக்கப்பட்ட 2.14 லட்சம் வீடுகள், இன்னும் பணி நிறைவடையாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால், உண்மை நிலை வேறு. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், சமூகப் பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல், 2011 அடிப்படையில், கிராமசபை வழியே பயனாளிகள் கண்டறியப்படுகின்றனர். ஆனால், பல தகுதி வாய்ந்த பயனாளிகள், 2011ம் ஆண்டு பட்டியலில் விடுபட்டுள்ளனர் என, கண்டறியப்பட்டது.

தகுதியுள்ள விடுபட்ட பயனாளிகள், மாநிலம் முழுதும், 9.11 லட்சம் பேரை சேர்க்க, மத்திய அரசின் ஒப்புதல் எதிர்பார்க்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் புதிய வீடுகளை கட்ட நடவடிக்கைகள் தாமதமானது.பெயர் பதிவேற்றம்தற்போது, விடுபட்ட பயனாளிகள் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.

பணிகள் தொடர, மாநில நிதி 1,800 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஒன்பது மாவட்டங்களில், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்தால், மத்திய அரசு விடுவிக்காமல் உள்ள நிலுவை மானியம் 2,578 கோடி ரூபாய் வரும். எனவே, நிதி இழப்பீடு என்பது ஏற்புடையது அல்ல.

தேர்தலின் போது 505 வாக்குறுதிகளை அளித்தீர்கள். அவற்றில் முக்கிய வாக்குறுதிகளான, இல்லத்தரசிகளுக்கு மாதம், 1,000 ரூபாய். 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி; காஸ் சிலிண்டருக்கு,100 ரூபாய் மானியம் போன்றவற்றை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X