இந்தியருக்கு வருகை 'விசா' ரத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் 'விசா' தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளன. இந்நிலையில்,

புதுடில்லி:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் 'விசா' தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளன. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சின்எதிஹட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 14 நாட்களாக இந்தியாவில் தங்கியிருந்த பின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருவோருக்கு வழக்கமாக விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இலங்கை, வங்கதேசம், நேபாளம், பாக். ஆப்கன், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, உகாண்டா, நமிபியா நாட்டில் இருந்து வருவோருக்கும் தற்காலிகமாக விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க விசா, கிரீன் கார்டு, பிரிட்டன் அல்லது ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் வசிக்கும் உரிமை உள்ள இந்தியர்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்திறங்கியதும் விசா வழங்கப்படும்.

அது 14 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.அந்த சான்றிதழ் இந்தியாவில் இருந்து விமானத்தில் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X