பஞ்சாபில் அமரீந்தர் சிங்கின் காங்., அரசுக்கு ஆபத்து

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 24, 2021
Share
Advertisement
சண்டிகர் :அடுத்த ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.'முதல்வர் அமரீந்தர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; அவரை மாற்ற வேண்டும்' என, காங்., மேலிடத்துக்கு ஐந்து அமைச்சர்கள், 24க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்., மாதம் நடக்க
பஞ்சாப்,  அமரீந்தர் சிங், காங்., அரசு ஆபத்து   அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ,போர்க்கொடி

சண்டிகர் :அடுத்த ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.'முதல்வர் அமரீந்தர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; அவரை மாற்ற வேண்டும்' என, காங்., மேலிடத்துக்கு ஐந்து அமைச்சர்கள், 24க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்., மாதம் நடக்க உள்ளது.முதல்வர் அமரீந்தருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து போர்க்கொடி துாக்கி வந்தார். அமரீந்தரை பகிரங்கமாக விமர்சித்தார்.இதையடுத்து, சித்துவை காங்கிரஸ் மேலிடம் அழைத்து பேசி சமாதானப்படுத்தியது. அவரை பஞ்சாப் மாநில காங்., தலைவராக சமீபத்தில் நியமித்தது. இது அமரீந்தருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதை வெளிக்காட்டாததால் பிரச்னை, நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.



இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என ஐந்து அமைச்சர்கள், 24க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். சுக்ஜீந்தர் ரந்தாவா, சுக்பிந்தர் சர்காரியா, சரண்ஜித் சன்னி உட்பட நான்கு அமைச்சர்கள், 24க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் நேற்று, அமைச்சர் டிரிப்ட் ராஜேந்தர் பஜ்வா வீட்டில் கூடினர்.அவர்கள் தரப்பில் முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்றக்கோரி காங்., மேலிடத்தை சந்திக்க ஐவர் குழு அமைக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் ரந்தாவா கூறியதாவது:முதல்வர் அமரீந்தரின் செயல்பாடுகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் தலைமையில் சட்ட சபை தேர்தலை சந்தித்தால் தோல்வி நிச்சயம். ஆட்சியை தக்க வைக்கும் கனவு கானல் நீராகும்.

முதல்வரை மாற்றும் உரிமை கொண்ட கட்சி மேலிடத்தை சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்துள்ளோம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி பஞ்சாபில் காங்., ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளோம். யாருக்கு ஆதர வாகவும் நாங்கள் செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து, அமரீந்தர் சிங் மற்றும் சித்து ஆகியோர் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், முதல்வருக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியிருப்பதன் பின்னணியில் நவ்ஜோத் சிங் சித்து உள்ளதாக அரசியல் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.


சத்தீஸ்கரிலும் பிரச்னை



சத்தீஸ்கரில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்றதை அடுத்து, மூத்த தலைவர்கள் டி.எஸ்.சிங் தியோ, பூபேஷ் பாகேல் ஆகியோர் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டனர்.முடிவில், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருவர் என, முதல்வர் பதவிக்கான கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து பாகேல் முதல்வராகவும், சிங் தியோ சுகாதாரத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.ஆனால் இரண்டரை ஆண்டுகள் முடிந்தும், முதல்வர் பதவியை பாகேல் விட்டுத் தரவில்லை.

இதனால் இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டது.இதையடுத்து, இருவருக்கும் ராகுல் அழைப்பு விடுத்திருந்தார்.டில்லியில் நேற்று இருவரும் ராகுலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.அப்போது சத்தீஸ்கர் மாநில காங்., தலைவர் பி.எல்.புனியா, காங்., தேசிய பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, சோனியாவையும் பாகேல் சந்தித்தார்.இது குறித்து நிருபர்களிடம் பேசிய இருவரும், ''கட்சித் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்படுவோம்,'' என்றனர்.



ஆலோசகர்களால் தலைவலி



பஞ்சாப் மாநில காங்., தலைவராக சித்து நியமிக்கப்பட்ட பின், அவருக்கு நான்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், பல்விந்தர் சிங் மாலி மற்றும் பியாரேலால் கர்க் ஆகியோர் சமீபத்தில் கூறிய கருத்துகள் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளன.'ஜம்மு - காஷ்மீர் ஒரு தனி நாடு. அதை இந்தியா மற்றும் பாக்., ஆக்கிரமித்துள்ளன' என, சமூக வலைதளத்தில் மாலி பதிவிட்டிருந்தார். பாகிஸ்தானை விமர்சித்து முதல்வர் அமரீந்தர் சிங் கூறிய கருத்துகளுக்கு கர்க் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இவர்களது கருத்துகள், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து அவர்களைக் கட்டுப்படுத்தும்படி சித்துவுக்கு, அமரீந்தர் சிங் அறிவுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை அமைதியாக உள்ளது. இதை பா.ஜ., பயன்படுத்த துவங்கியுள்ளது.


தேர்தல் பிரசாரம்



'சித்து மற்றும் அவரது ஆலோசகர்கள் மீது தேச விரோத சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பஞ்சாபில் பா.ஜ., மற்றும் அகாலி தளம் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேசத்திலும் இந்தப் பிரச்னையை பா.ஜ., கையில் எடுத்துள்ளது.அடுத்தாண்டு துவக்கத்தில் பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதனால் இந்த விவகாரம் காங்., தலைமைக்கு குடைச்சலாக அமைந்துள்ளது.
''சித்து மற்றும் அவரது ஆலோசகர்களை கட்சித் தலைமை தான் நியமித்து உள்ளது.''நாட்டுக்கு எதிராக அவர்கள் பேசியுள்ளதற்கு நடவடிக்கை எடுக்காமல், சோனியா, ராகுல் மவுனமாக இருப்பது, அவர்களது பேச்சை ஏற்பது போல் அமைந்துள்ளது,'' என, பா.ஜ., செய்தித் தொடர்பாளர்சம்பித் பத்ரா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X