அமெரிக்க உளவுப்பிரிவு இயக்குனர் தலிபான் தலைவருடன் ரகசிய பேச்சு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் வில்லியம் ஜே பர்ன்ஸ், ஆப்கன் சென்று தலிபான் தலைவர் அப்துல் கனி பரதரை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவம் இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும். அத்துடன், அங்குள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மற்றும் நேச நாட்டு படையினரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இந்த கெடு முடிய சில

வாஷிங்டன்:அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் வில்லியம் ஜே பர்ன்ஸ், ஆப்கன் சென்று தலிபான் தலைவர் அப்துல் கனி பரதரை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவம் இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும். அத்துடன், அங்குள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மற்றும் நேச நாட்டு படையினரையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த கெடு முடிய சில நாட்களே உள்ள நிலையில், 'அனைவரையும் வெளியேற்றும் வரை ஆப்கனில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும்' என, பிரிட்டன் உள்ளிட்ட நேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், 'அமெரிக்கா உறுதி அளித்தபடி வெளியேறா விட்டால் நிலைமை விபரீதமாகும்' என, தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவுப்படி, உளவுத் துறை இயக்குனர் வில்லியம் ஜே பர்ன்ஸ் ரகசியமாக ஆப்கன் சென்று, தலிபான் தலைவர் அப்துல் கனி பரதரை சந்தித்து பேசியதாக, அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. இருவரும் பேசிய விபரங்கள் வெளியாகவில்லை.

எனினும் அமெரிக்க ராணுவம் காபூல் விமான நிலையத்தில் உள்ளோர் அனைவரையும் வெளியேற்றும் வரை இன்னும் சில காலம் தங்கியிருப்பது குறித்து, இருவரும் விவாதித்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.இது குறித்து அடுத்த சில நாட்களில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X