பொது செய்தி

இந்தியா

திருமலை விரைவு தரிசன முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்ததால் ஏமாற்றம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்ட 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு 10 நிமிடத்தில் முடிவடைந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 8,000 டிக்கெட்டுகள்திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் 20ம் தேதிக்கு மேல் அடுத்த மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை

திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்ட 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு 10 நிமிடத்தில் முடிவடைந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


8,000 டிக்கெட்டுகள்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் 20ம் தேதிக்கு மேல் அடுத்த மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் ஏழுமலையானைதரிசித்து வருகின்றனர்.

கொரோனா பரவலுக்குப் பின் துவங்கப்பட்ட தரிசனத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் விரைவு தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக மாதந்தோறும் தேவஸ்தானம் தினசரி 8,000 டிக்கெட்டுகளை இணையதள முன்பதிவில் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் செப்., மாதத்துக்கான விரைவு தரிசன முன்பதிவு நேற்று காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் துவங்கியது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்ய முயன்றனர்.இதனால், 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிவடைந்தது. கடந்த இரண்டு மாதங்களாக இணையதளத்தில் வெளியிடப்படும் டிக்கெட்டுகளின் முன்பதிவு, 10 நிமிடத்தில் முடிவடைந்து விடுகிறது. இதனால் பக்தர்களால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியவில்லை.

மேலும் டிக்கெட் வெளியிடப்படும் சமயத்தில் தேவஸ்தானத்தின் இணையதள சேவை முற்றிலும் முடங்கி விடுகிறது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


முன்னுரிமை

விரைவு தரிசன டிக்கெட்டுகளை காட்டிலும் விமான, ரயில் மற்றும் பஸ் வாயிலாக நடத்தப் பட்டு வரும் சுற்றுலாத்துறைக்கு திவ்ய தரிசனம் என்ற பெயரில் அளிக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு தேவஸ்தானம் முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால் விரைவுதரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாகவும் பக்தர்கள் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X