'நாட்டின் மகுடங்களை மோடி விற்கிறார்'

Added : ஆக 24, 2021
Share
Advertisement
புதுடில்லி:''மக்கள் வரிப் பணத்தில் 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மகுடங்களை, சில குறிப்பிட்ட நபர்களுக்கு பிரதமர் மோடி அரசு விற்கிறது,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.ரயில்வே, சாலை, விமான போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில், தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
 'நாட்டின் மகுடங்களை மோடி விற்கிறார்'

புதுடில்லி:''மக்கள் வரிப் பணத்தில் 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மகுடங்களை, சில குறிப்பிட்ட நபர்களுக்கு பிரதமர் மோடி அரசு விற்கிறது,'' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரயில்வே, சாலை, விமான போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில், தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதன் வாயிலாக 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இது குறித்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளதாவது:கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் நடக்கவில்லை என பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகளால் உருவாக்கப்பட்ட நாட்டின் மகுடங்களை மோடி அரசு தற்போது விற்றுள்ளது.அரசுக்கு சொந்தமானவற்றை தனியார்மயம் ஆக்குவதன் வாயிலாக, குறிப்பிட்ட சிலரின் ஏகபோகத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இதனால் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும்.

அமைப்பு சாரா துறைகளில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்துவதுடன், அமைப்பு சாரா துறைகளை முழுமையாக அகற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

''நிதி திரட்டுவது மட்டுமே நோக்கமாக தெரியவில்லை. இவ்வளவு பெருமதிப்புள்ள சொத்துக்களை விற்கும் முன், ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திஇருக்க வேண்டும்,'' என, காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X