அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிதாக 32 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழு: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன்வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:* ஊரக சாலைகளை 5,780 கி.மீ., நீளத்திற்கு மேம்படுத்துதல், 121 பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் 2,097 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்பரிசு தொகை* நிலத்தடி நீரை அதிகரிக்கவும், நீர்பாசன தேவைகளை நிறைவேற்றவும் 1,149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள், உறிஞ்சு குழிகள், கிணறுகள் மற்றும் இதர

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன்வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

* ஊரக சாலைகளை 5,780 கி.மீ., நீளத்திற்கு மேம்படுத்துதல், 121 பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் 2,097 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்


பரிசு தொகை

* நிலத்தடி நீரை அதிகரிக்கவும், நீர்பாசன தேவைகளை நிறைவேற்றவும் 1,149 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள், உறிஞ்சு குழிகள், கிணறுகள் மற்றும் இதர பசுமையாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்

* ஊரக பகுதிகளில் 1,000 கி.மீ., 'கான்கிரீட்' சாலைகள், 600 கி.மீ., 'பேவர் பிளாக்' சாலைகள், 350 கி.மீ.,க்கு கான்கிரீட் வடிகால்கள், 500 சுடுகாடுகள் மேம்பாட்டு பணிகள், 916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

* ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம், 1,000 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்

* சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், முன்மாதிரி கிராம விருது தோற்றுவிக்கப்பட்டு, மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 விருதுகள், கேடயமாகவும் தலா 7.50 லட்சம் ரூபாய் பரிசு தொகையாகவும் வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு, மாநில அளவில் முன்மாதிரி விருதுக்கான கேடயம் மற்றும் 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்

*வீடுகளுக்குவழங்கப்படும் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்து உறுதிப்படுத்துவதற்காக 10.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த, 62 ஆயிரத்து 625 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்

* பெண் ஊராட்சி செயலர்களுக்கான, மகப்பேறு கால விடுப்பு, ஒன்பது மாதங்களில் இருந்து ஓராண்டாக உயர்த்தி வழங்கப்படும்

* ஊரகப் பகுதிகளில் 12 ஆயிரம்; நகர்புற பகுதிகளில் 20 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும்.


வேலைவாய்ப்பு



ஊரக குழுவிற்கு 15 ஆயிரம் ரூபாய், நகர்புற குழுவிற்கு 10 ஆயிரம் ரூபாய் என, 38 கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்படும். ஊராட்சிகள் அளவிலான 30 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 150 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதியாக வழங்கப்படும்

* மகளிர் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய, வீட்டின் பின்புறத்தில், சத்தான கீரைகள், முருங்கை, பப்பாளி, கொய்யா, சப்போட்டா போன்ற ஊட்டசத்து தோட்டம் அமைக்க,1 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்

* கிராம மற்றும் நகர்புறங்களில் உள்ள 25 ஆயிரம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு அளிக்கவும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தேவையான திறன் பயிற்சிகள் 87.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்

* மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு, 'மணிமேகலை விருது'கள் வழங்க2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X