பொது செய்தி

தமிழ்நாடு

செப்டம்பர் 1ல் பள்ளி திறப்பு :காட்பாடி அரசு பெண்கள் பள்ளி வளாகம் தூய்மை செய்யும் பணி துவக்கம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
முதல்வர் ஆணைப்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு பள்ளிகள் செயல்படவுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின் படி காட்பாடி அரசு பெண்கள்
 செப்டம்பர் 1ல் பள்ளி திறப்பு :காட்பாடி அரசு பெண்கள் பள்ளி வளாகம் தூய்மை செய்யும் பணி துவக்கம்

முதல்வர் ஆணைப்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு பள்ளிகள் செயல்படவுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின் படி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் வேலூர் மாநகராட்சியின் சுகாதார அலுவலர் பி.பாலமுருகன் அவர்கள் தலைமையில் மேற்பார்வையாளர் மதியழகன் மற்றும் தூய்மை பணியாளர்கள் பள்ளிக்கு வருகை தந்து சுற்றுபுறங்கள், மைதானங்கள், வகுப்பறைகள், பள்ளியில் உள்ள மேஜை நாற்காலிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டனர்.
பள்ளியின் தலைமையாசிரியை (பொ) டி.என்.ஷோபா, ஜுனியர் ரெட்கிராஸ் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.புவனா, ஜெ.கௌசல்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X